தேஜாவுக்கு எப்போதும் பொருட்களின் மேல் அதீத அக்கறை . அவளது விளையாட்டு சாமான்களை ரொம்பவும் பத்திரமாகவே வைத்து கொள்வாள். இத்தனைக்கும் அவள் எதையாவது உடைத்தாலும் கூட நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம் . அவள் விளையாட அவள் ஆராட்சி செய்ய உடைக்க தானே வாங்கி இருக்கிறோம், ஆனா அவ ரொம்ப பத்திரமா வெச்சிருக்கறது தான் எனக்கு கவலைய இருக்கு, எப்பவும் அவள சுத்தி அவளோட திங்க்ஸ் இருக்க வேண்டும், அவளோட சைக்கிள்ல மூட்ட மூட்டையா அடுக்கி வெச்சு இருப்பா, எதாவது புதுசா வாங்கி கொடுத்தா அன்னைக்கு நைட் கண்டிப்பா அவ கூட தான் அந்த பொருளும் தூங்கும்,யாரவது எடுத்துட்டு போய்டுவாங்களாம். இதை மாற்ற நாங்களும் எவ்வளவோ முயற்சித்து பார்த்து விட்டோம், ஆனாலும் அவளின் இந்த பழக்கத்தை மாற்ற முடிய வில்லை.
நேற்றும் அப்படி தான் கொஞ்சம் வளையலும் ஹேர் கிளிப் உம் வாங்கி கொடுத்தேன் . வளையல் மட்டும் அணிந்து கொண்டாள். மற்றவை வழக்கம் போல தலையணை பக்கத்தில் தான், இன்று அந்த ஹேர் கிளிப் போட மறுக்கிறாள், கேட்டால் ஸ்கூல், க்கு தான் போட்டுட்டு போவாளாம். இன்னும் 2 1 /2 மாசத்துக்கு வீட்ல குப்பை தான் .எல்லா பெண் குழந்தைகளும் இப்படிதான் இருக்காங்களா, இல்ல இந்த பழக்கம் அவ வளர வளர சரியாயிடுமா தெரியல,
----------------------------------------------------------------------------------------------
Wednesday, March 24, 2010
Wednesday, March 17, 2010
புலம்பல்
தேஜாவுக்கு இந்த வாரத்துடன் பள்ளி நிறைவு பெறுகிறது, எனக்கு டென்ஷன் ஆரம்பிச்சாச்சு, எனன செய்யறது இன்னும் இரண்டரை மாதங்கள், தேஜாவும் ரஞ்சித்தும் (அண்ணா பையன்) பண்ற அட்டுழியம் தாங்க முடியாது .நாம வீட்ல இருந்தா ஏதாவதொரு ஆக்டிவிட்டில நேரம் போய்டும், நாம காலையில ஆபீஸ் வந்தா போற டைம் சொல்ல முடியாது, இப்போதைக்கு எங்க அம்மா தான் பார்த்துக்கறாங்க, அவங்களுக்கும் இப்ப உடம்பு சரி இல்ல , மாமியாரோ ஹார்ட் பேசன்ட்,
எதாவது கேம்ப்க்கு அனுபலம்னா அதுக்கான வயசும் இல்ல, 3 ,3 1 / 2 வயசு குழந்தைகள வெச்சு எனன பண்றது, அப்படியே எதாவது பாட்டு கிளாஸ் , டான்ஸ் கிளாஸ்ல விட்டாலும் 1 மணி நேரம் தான் . அதுக்கு அப்புறம் ?
ஸ்கூல் இருக்கற நேரங்கள்ல சாப்பிடறதும், தூங்கறதும் நேர நேரத்துக்கு நடக்கும் இனி மேல் அது சாத்தியம் இல்ல, காலையில ஸ்கூல் கிளம்பற அவசரத்துல ஆட்டோ வந்துடும்னு சொல்லியே எதாவது ஊட்ட முடியும், இனி சாப்பிட (நாம கிளம்பறதுக்கு உள்ள ஒரு வேலை முடியுமேன்னு) சொன்னா "எனக்கு பசிக்க்கலாமா"னு சொல்லுவா எங்க வீட்டு பெரிய மனுசி (தேஜா தான்) .
தூங்கறதுக்கும் அப்படிதான் ...
எனன மாதிரியான தாய்மார்கள் எனன பண்றாங்கன்னு தெரியல , யாராவது ஒரு ஐடியா கொடுங்களேன் ப்ளீஸ்.... ப்ளீஸ்....

Sunday, March 14, 2010
நிறங்கள்
சமீபத்தில் ஆனந்த விகடனில் திரு. கோபிநாத் அவர்கள் நிறங்களை பற்றி ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அதை படிக்கும் போது எனக்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது,
நான் சிறுவயதில் நன்றாகவே படிப்பேன். முதல் இரண்டு , மூன்று ரேங்க்குக்குள் எடுக்கும் அளவிற்கு (சத்தியமாக) . எந்த வேலையையும் என்னிடம் கொடுத்தால் பொறுப்பாகவும் முடிப்பேன் , சில நேரங்களில் பரீட்சை விடை தாள்களை திருத்தும் பணியையும் ஆசிரியர்கள் எங்களிடம் தருவார்கள்.
ஆனால் எங்கள் பள்ளிக்கு யாரவது சிறப்பு விருந்தாளிகள்
வந்தால் மட்டும் அவர்களை வரவேற்க அனுப்ப மாட்டார்கள், ஏன்னா நாங்க எல்லாம் மாநிறமாக இருக்கும் காரணத்தால் , அந்த வயதில் எதிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வ கோளாறு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் எதுலயும் விருப்பம் இல்லாமல் அழகுல மட்டும் தனி கவனம் செலுத்த ஒரு கூட்டம் இருக்கும், நல்லா நிறம் கொண்ட அந்த பெண்கள் எல்லாம் எங்கள் வகுப்பை சேர்ந்த ஆனால் பெரிய பெண்கள், அவர்களாக எதாவது பேசி அவர்களாக சிரித்து கொண்டே இருப்பார்கள், எதற்காக சிரிக்கிறார்கள் என்று புரியாமல் இருக்கற கூட்டம் நம்முடையது, அதுக்கு மேல கேட்டா நீங்கள்லாம்
சின்ன பொண்ணுங்க உங்களுக்கு எல்லாம் சொன்னா புரியாதுன்னு சொல்லுவாங்க.
அந்த பெண்களை மட்டுமே தெரிவு செய்து அந்த சிறப்பு விருந்தினர்க்கு அன்பளிப்பு அளிக்க செய்யும் போது எங்களை போல சிலருக்கு எப்படி இருக்கும்? அந்த மாதிரி சமயத்துல கொஞ்சம் ஒதுங்கியே தான் இருப்போம் .அப்ப தான் நாமளும் சிவப்பா பிறக்கலேன்னு தோன்றியது . நாமாக நிறத்தை பற்றிய ஒரு எண்ணத்தை நினைக்காத போதும் , அந்த பாகுபாட்டை பள்ளிகளே செய்தன .
(ஆனா நல்லா படிக்கற பொண்ணுங்க எல்லாம் சுமாராத்தான் இருப்பாங்களோ! எங்க கிளாஸ்ல அப்படி தான் இருந்தோம் .)
டீன் ஏஜ்ஜில் நிறம் ஒரு பெரிய பிரச்சனையே . நானும் என் மற்ற மாநிற தோழியரும் கண்ட கண்ட அழகு சாதன பொருட்களையும் வாங்கி முயற்சித்தோம், ஒன்றும் பலன் இல்லை, (அப்ப நடந்த சில போட்டிகளில் நாங்க கலந்துக்கவே இல்ல வேணும்னே தான் )அந்த சமயத்துல தான் எங்களது ஆதங்கத்தை எங்கள் கணித ஆசிரியருடன் பகிர்ந்து கொண்ட போது அவர் சொன்னது இது தான் , (அவர் எப்போதும் நன்றாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பார்). இன்னும் உன் திறமையை வளர்த்து கொள் . உன் திறமையை கண்டு பலரும் உன்னை திரும்பி பார்க்கும் படி செய் என்று என்னையும் என் தோழியரையும் உற்சாக படுத்தினார்கள்.
அழகுங்கறது நிரந்தரம் இல்லன்னும் சொன்னார். அதுக்கு அப்புறமா அழகுக்காக செலவு செய்ய, நேரமோ , பணமோ செலவழிக்க வில்லை,
அதன் பின் இன்னும் அதிகமாகவே படித்தோம் அவர் சொன்னது போல நல்ல மதிப்பெண்களையும் பெற்று, இன்று நன்றாகவே இருக்கிறேன் , எங்கோ கேள்வி பட்டது ,
சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான்
கருப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்பு தான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
மனிதனின் எண்ணங்களில் இருக்கிறது.................

Thursday, March 4, 2010
யாருக்கும் வெட்கமில்லை
கடந்த 2 நாட்களாக பரபரப்பான செய்தியே பரமஹம்ச நித்யானந்தர் பற்றியது தான்.
இந்த விசயத்திற்கு இவ்வளவு ஆர்பாட்டம் வேண்டுமா? இதில் நித்யானந்தர் செய்தது மட்டும் தான் குற்றமா.? என்னை நம்ம்புங்கள் என்று அவனா சொன்னான், அவனது பேச்சும் கருத்துக்களும் பிடித்ததென்று பின்னாலயே சென்றதே ஒரு கூட்டம் அவர்கள் மேல் பிழை இல்லையா? காவி உடுத்தி கொண்டு யார் எனன சொன்னாலும் கேட்க்க ஆட்டு மந்தையாய் சுற்றிய கூட்டதார்க்கு எங்கு சென்றது அறிவு,
அவனது லீலையை வெளிகொன்று வரும் பொருட்டு அந்த பெண்ணின் மானமும் அல்லவா போகிறது . இதில் கண்டிப்பாக அந்த பெண்ணை குறை சொல்ல முடியாது ஒரு பெண் தனக்கு பிடித்தமானவருடன் இருக்கிறாள்,இதை எப்படி குறை சொல்ல முடியும் ?அது சரியோ தவறோ அவளுக்கு பிடித்தது ,ஆனால் அவளுக்கும் வெட்கம் இருக்கும்,
அந்த அந்தரங்கத்தை பறை சாற்றிய ஊடகம் செய்தது மட்டும் சரியாகுமா?
ஊடகத்திற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது . இப்படி ஒரு விஷயத்தை அப்பட்டமாக பட்ட பகலில் காண்பிப்பது சரியா? ஒவ்வொரு பதினனது நிமிடத்திற்கு ஒரு முறை , இதுவும் ப்ளூ பிலிம் மாதிரி தானே ? அந்த சேனலின் T R B ரேட் உயர்வதற்காக எதை வேண்டுமானாலும் காண்பிக்கலாமா? அப்ப அவர்களின் வக்கிர எண்ணங்களை எனன சொல்ல்வது?
10 மணி செய்திகளுக்கென்று ஒரு சிறப்பே இருக்கிறது, அன்றைய நாளின் மொத்த நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும் , சில குடும்பங்களில் ஒரு வழக்கம் உண்டு, 10 மணி செய்தியை குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒன்றாக தான் பார்ப்பார்கள், இதில் நடுத்தர வயதுள்ள குழந்தைகளும் அடங்கும், செய்திகளுக்கான சேனலில் இப்படி கொஞ்சம் கூட சமுக அக்கறை இல்லாமல் நடந்நது கொண்ட அந்த தொலை காட்சியை எனன சொல்வது , முன்பெல்லாம் இது மாதிரியான செய்திககள்
காண்பிக்கும் பொழுது நிறைய மறைக்க பட்டு சரியாக தெரியாதது மாதிரி இருக்கும் ஆனால் இப்போது அப்பட்டமாக காண்பிக்கிறார்கள் , குழந்தைகளுடன் நியூஸ் பார்க்க கூட முடிவதில்லை.
பிரேமானந்தா, அர்ச்சகர், கல்கி , நித்யானந்தர் இந்த வரிசையில் அடுத்தது யாரோ ????????
ஆக மொத்தத்தில் ஏமாற ஒரு கூட்டம் இருந்தால் ஏமாற்ற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்.

Thursday, February 25, 2010
செல்ல குட்டி
தேஜாவுக்கு இப்பெல்லாம் அவங்க அப்பாவ வம்புக்கு இழுககறதே வேலையா போச்சு .
" இன்னைக்கு உங்க சோப்பு போட்டு தான் குளிக்க போறேன்" - இது தேஜா
"என்னோட சோப்பு தொடாத , நீ என் சோப்பு போட்டு குழிச்சா நான் உன்னோடத எடுப்பேன்" பக்கத்தில் இருந்த ரின் சோப்பை காட்டி "இந்தா இந்த சோப்பு போட்டு குளி" - தேஜா அப்பா
"நான் என்ன துணியா? "
என்ன சொல்றதுன்னு தெரியாம தேஜா அப்பா :)! -
----------------------------------------------------------------------------------------------------------------------------
தேஜாவும் நானும் எதாவது படிக்கும் போது ஒவ்வொரு வார்த்தைக்கும தமிழ்ல அர்த்தம் சொல்லிவிடுவேன். திடீர்னு ஒரு முறை என்னிடம் என் பெயரை சொல்லி இது தமிழா இங்கிலிஷா என கேட்க்க , நானும் தமிழ் தான்னு
சொல்ல அப்ப இங்கிலிஷ்ல உன் பேர் என்ன? இங்கிலீஷ் ளையும் என் பேரு இது தாண்டா, " உனக்கு மட்டும் ஏன் ஒரே பேரு , உங்க அம்மா உனக்கு இங்கிலீஷ் ல பேர் வைக்க மறந்துட்தாங்களா "
திரு திரு .................. (அட நான் தாங்க)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தேஜா ஸ்கூல்ல நேத்து ஸ்போர்ட்ஸ் டே. அவளுக்கு " Ball Hunting" ல செகண்ட் Prize. மேடம்க்கு சந்தோசம் தாங்கல ,எல்லாரும் clap பண்ணினார் களாம். இது வரை அவளுக்கு Prize கிடைத்ததில்லை. கொஞ்ச நாள் முன்னாடி recitation competition ல அன்னை தெரசா மாதிரி டிரஸ் பண்ணிட்டு,(அன்னை தெரசா quotes சொல்லி தந்தேன் வீட்ல ரொம்ப கரெக்டா சொன்னா). ஆனா அங்க எதுவும் சொல்லாம வந்துட்டா .என்னுடைய அண்ணா பையன் ரஞ்சித்தும் அதே class ல தன படிக்கிறான் அவன் கரெக்டா சொல்லி அவனுக்கு பரிசு கிடைத்தது, நாங்க எதுவும் compare பண்ணி பேசலைன்னாலும் தனக்கு பரிசு கிடைக்கலன்னு கொஞ்சம் feel பண்ணினா. (இந்த வயசுலயே எப்படி எல்லாம் பீல் பண்றாங்கப்பா). இந்த முறை prize வாங்கிட்டா சந்தோசம் தான் .
------------------------------------------------------------------------------------------------------------------------------
தேஜாவுக்கு "செல்லகுட்டின்னு" கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும். அவ ஒரு முறை செய்த ஒரு தவறுக்காக அவளை திட்டிய போது என்னிடம் அழுது கொண்டே " பார் என் நெஞ்ச தொட்டு பார் எப்படி வேகமா துடிக்குது . நான் பயந்துட்டேன் எனன செல்லகுட்டின்னு சொல்லு " ன்னு சொல்லற அவள பார்க்கும் போது ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் , இப்படியெல்லாம் பேச சொல்லி யார்டா சொல்லிதரதுன்னு கேட்க்க தோணுது . அப்புறம் எங்க கோப படறது..................
செல்ல குட்டி இன்னும் வரும்.............

Monday, February 22, 2010
'ஹைடி'- ithu vilambaram alla
'ஹைடி'
இது விளம்பரம் அல்ல.
ஹைடி இது சுட்டி டிவிஇல் தினமும் காலை ஒளிபரப்ப படும் ஒரு தொடர், சுட்டி டிவி இல் வரும் ஒரு உருப்படியான நிகழ்ச்சி. ஹைடி மலையில் வசிக்கும் ஒரு சின்ன பெண். அங்க இருக்கற இயற்கையை ரசிச்சுகிட்டு, இயற்கையோட வாழறா. அதுல காமிக்கிற மலைகளும் அவங்க வாழ்க்கையையும் ரொம்ப அழகா இருக்கு, ஹைடி பட்டாம்பூச்சி கூடவும், ஆட்டு குட்டி கூடவும் பேசி விளையாடறத பார்க்கும் பொழுது நமக்கே ஆசையா இருக்கு,இதுல கிராமத்து வாழ்க்கைக்கும், நகரத்து வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசமும் ரொம்பவே அழகா நமக்கு புரியும், உண்மையிலே குழந்தைகள் நாய், பூனை பார்த்து எல்லாம் பயப்பட மாட்டங்க, அதோட பேசுவாங்க , ரொம்ப அன்பா விளையாடுவாங்க, நாம தான் வளந்ததுக்கு அப்புறமா இதெல்லாம் ரசிக்க மறந்திடறோம் . அதுல காமிக்கற மாதிரி ஒரு கிராமமும் இப்ப இருக்குமான்னு தெரியல, ஒவ்வொரு சீசன் னா கதை நகருது அதனால சீசன் பதியும் குழந்தைகளுக்கு நாம சுலபமா கத்து கொடுக்க முடியுது, அது மட்டும் இல்லாம உயிர்களிடத்து அன்பு வேணும்ங்கறத உணர வைக்குது ,ஹைடி ஸ்கூல்க்கு போகணும்னு விருப்பப்படும் போது அவங்க தாத்தா சொல்லுவாரு பள்ளிக்கூடம் கத்துதரத விட பல மடங்கு கிராமத்துல நீ கத்துக்கலாம்னு . அது உண்மை தான . ஒரு செடி எப்படி வளர்துன்னு நாம புக் ல படத்த பார்த்து தான தெரிசுகறோம் .அத மனப்பாடம் செஞ்சு தான மனசுல நிறுத்திகிறோம். அனுபவத்துல தெரியறது இல்ல .
இயந்திர தனமா இயங்கிட்டு இருக்கற நாம நல்ல பல விசயங்கள ரசிக்க மறந்திடறோம் எதுக்காக பணம் சம்பாதிக்கறோம், நாம எத நோக்கி போயிட்டு இருக்கோம் இதெல்லாம் நம்மக்கே தெரியாது இயற்க்கைய அழிச்சுட்டு செயற்கையான விசயங்களுக்கு நாம முக்கியத்துவம் கொடுக்கறோம் அதையே ரசிக்கவும் செய்யறோம் . நாமும் நம்ம குழந்தைகளுக்கு இயற்க்கைய ரசிக்க பழக்கலாமே .
இன்னும் வரும்

Thursday, February 18, 2010
ஸ்கூல்
தேஜா இப்போது நர்சரியில் படிக்கிறாள். கடந்த ஒரு வாரமாக ஹோம் வொர்க் கொடுக்கிறார்கள். முதலில் STANDING லைனில் ஆரம்பித்து E F I T இந்த மாதிரி எழுத்துக்களை எழுத பழக்க படுத்துகிறார்கள். முதல் இரண்டு நாட்கள் எழுத ரொம்ப ஆசை பட்டாள். இபோது அவளுக்கு எழுதவே விருப்பம் இல்லை. ஒரு வகையில் பார்த்தால் பாவமாக இருக்கு. ஆனால் இந்த ஹோம் வொர்க் குடுக்கறதுக்கு முன்னாடி அவளாகவே சுவற்றிலும், எந்த புக் கிடைச்சாலும் அதுலயும் ரொம்பவே கரெக்டா A, B, T,H E NNU சில எழுதுக்கள எழுதிட்டு இருந்தா. கண்டிப்பா HOMEWORK செய்யணும்ணு சொன்னா என்னைபார்த்து பார்த்து சிரிச்சுகிட்டே இருக்கறா . அவ சிரிப்ப பார்த்ததுக்கு அப்புறமா என்ன பண்றது.ஆனாலும் எப்படியோ தாஜா பண்ணி எழுத வைக்கறது தான் . நானெல்லாம் 5 வயசுல தான் எழுதவே ஆரம்பிச்சேன் . ஆனா இப்ப இருக்கற EDUCATION SYSTEM வேறமாதிரி இருக்கு, இங்க ஒரு SCHOOL ல PRE-KG (2 1/2 YRS) சேக்கறதுக்கு குழந்தைக்கு INTERVIEW. அந்த குழந்தை ALPHABET சொல்லனுமாம். உங்க அப்பா அம்மா எங்க வொர்க் பண்றாங்கன்னு கேட்டா சொல்ல தெரியணுமாம். அப்படிசொல்ல தெரியலன்னா ADMISSION கிடையாது என்னை கொடுமை இது, இந்த மாதிரியான ஸ்கூல நாம தேர்ந்தெடுக்க கூடாதுன்னு நினைச்சா சாதாரண MATRIC SCHOOLAYUM INTERVIEW IRUKKUNU சொல்லறாங்க .
தற்போது இருக்கும் பல நர்சரி பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் மேலை நாட்டு முறையை பின்பற்றுவதாக சொல்லுகிறார்கள் . அவர்கள் எதோ MONTESSORI அம்மாவின் வாரிசுகளாக தங்களை நினைச்சுட்டு அவரது கல்வி முறைப்படி ஒரு கோடு கூட பிசகாமல் மாணவர்களை வழிநடத்துபவர்கள் மாதிரி தான் பேசுவாங்க. அதிலும் மிக பெரிய கொடுமை
MONTESSORI அம்மையார் சொன்னது என்னவோ தாய் மொழி கல்வி தான் சிறந்ததுன்னு , அவரோ இத்தாலியை சேர்ந்தவர் அவருக்கும் ஆங்கில வழி கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, ஆனா இங்க எல்லா ஸ்கூல் ஆங்கிலதேயே அடிப்படைய வெச்சு கற்று கொடுக்கும் சூழ்நிலை. ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே, அறிவு அல்ல என்பது பலருக்கு புரிவதில்லை .
இது புரிஞ்சாலும் வேற தமிழ் வழி கல்வி கர்பிக்கற ஸ்கூல் அருகில் இல்ல . அதனால வேற வழி தெரியாம நானும் இங்கிலீஷ் மீடியம் தேடி ஓட வேண்டி இருக்கு, இதுலயும் ஒவ்வொரு SCHOOLYUM ஒவ்வொரு மாதிரியான கல்வி திட்டம் MATRIC, CBSE ன்னு இதுல எத தேர்ந்தேடுக்கரதுன்னு ஒரே குழப்பம் . சமசீர் கல்வி திட்டம் வரதுக்கு முன்னாடியே பல ஸ்கூல்ம தங்களோட ஸ்கூல் ல CBSE க்கு மாதிடரங்க . இன்னும் ஸ்கூல்ல பத்தின பல விஷயங்கள் இருக்கு அடுத்த பதிவிலயும் இது தொடரும்.
Subscribe to:
Posts (Atom)