தென்னிந்தியாவின் மான்செஸ்டர்ன்னு சொல்ல படற எங்க கோவையில 80 -90 களில் மில் தொழிலாளர்களும், சிறிய அளவிலாவது வொர்க் shop வைத்திருந்தவர்களும் , ஒரு வீதியில் ஓரிரண்டு வீடுகளிலாவது தறி வைத்து சொந்த தொழில் செய்தவர்களும் ஏராளம். பெண்களும் வீட்டிலிருந்த படியே ராட்டினம் சுற்றும் வேலையையும் செய்துகொண்டிருந்தனர்.
மில் தொழிலாளிக்கு பெண் கொடுக்க நான் நீ என்று போட்டி போட்டுகொண்டு வருவார்களாம். தீபாவளி சமயத்தில் அவர்களுக்கு கிடைக்கும் போனஸ் தொகையை பார்த்து அரசு ஊழியர்களே வியந்து பார்ப்பார்களாம். அதோடு, ஒவ்வொரு மில்லிற்க்கும் ஒரு சங்கு (Horn ) சத்தம் உண்டு. அந்த சத்தத்தை வைத்தே பெரியவர்கள் நேரத்தை சரியாக சொல்லவதையும் , இந்த மில்லுல இருந்து இந்த சத்தம் வருதுன்னு சொல்ல்றதயும் கேட்டு பல நேரங்களில் நான் ஆச்சர்யபட்டதுண்டு. 80 களின் பிற்பாதியில் இருந்தே பல மில்களும் மூடி விட கோவைக்கு வந்தது முதல் பாதிப்பு. நவீன எந்திரங்கள் வரவும், ஆள்குறைப்பும், நடந்தேறி இன்று நல்ல நிலையில் ஓடி கொண்டிருக்கும் மில்களை விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்கு குறைந்து போனது.
சாலையோரங்களில் கிடக்கும் இரும்பு சுருள்கள் சொல்லும் இந்த ஏரியாவில் இருக்கும் வொர்க் ஷாப்களின் எண்ணிக்கை பற்றி. சில பெரிய நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பொருட்களின், உதிரி பாகங்கள் தயாரிக்க பயன்படுதப்பட்ட லேத் வோர்க்ஷோப்களில், மீதியாகும் இரும்பு சுருள்களை ஏற்றி செல்லும் வண்டிகளை பார்த்தாலே தெரியும் எந்த அளவிற்கு அங்க production நடந்திருக்குன்னு. நவீன எந்திரங்கள் வரவால் சிறு தொழிலதிபர்களும் இன்று காணமல் போய் விட்டார்கள்.
"காடா" ,"மல்" துணி என்று வெள்ளையும் அல்லாமல் , சந்தன நிறமும் அல்லாமல் , தயாராகும் துணி தயாரிக்க படும் "விசை தறி" இயக்கமும் இங்கு பிரபலமாக இருந்ததுண்டு. "தடக், தடக்" ன்னு கேட்கற சத்தம் கேட்டு பழக்கியவர்களுக்கு இந்த தறி சத்தம் கேட்கலைன்னா தூக்கம் வராது, குழந்தைகளுக்கு தொட்டில் கட்டவும், தையல் பயிற்சி கூடங்களிலும் இந்த துணிய அதிகமாகவே உபயோகித்து வந்தனர். பள்ளிகளில் embroidary போடவும் இந்ததுணி தான் பயன்பட்டது. (1 மீ வெறும் 7 அல்லது 8 ரூபாய் தான்) சோமனூர் போன்ற புறநகர் பகுதிகளில் மட்டுமே இந்த விசைத்தறி தற்போது இயங்கி வருகிறது. இதில் வீட்டில் இருக்கும் பெண்களும் ராட்டினம் சுற்றுவதும் , இந்த நூலிலிருந்து பெரிய பெரிய கயிறுகள் தயாரிப்பதும், என்று எங்கு திரும்பினாலும் எதாவது ஒரு தொழில் நடைபெற்று கொண்டிருக்கும். காலம் மாற மாற எதையுமே பரவலாக காண முடிவதில்லை. சுய தொழில் செய்பவர்களையும் காண முடிவதில்லை.
இவ்வாறான சிறு தொழில்கள் அழிந்து எங்கும் கணினி யுகம். கணினி துறையை மேம்படுத்தும் விதமாய் "Tidal பார்க்" வருகை வேறு, கணினிதுறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தபடுகின்றது. கணினி துறை மட்டும் தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற்ற துறையா? மற்ற துறைகளை அல்லது மற்ற தொழில்களை பின் தள்ளி விட்டு ஒரு துறையை சார்ந்தவர்கள் மட்டும், ஒரு தொழில் மட்டும் முன்னேறுவது சரியா? தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ன்னு பெயர் பற்ற ஒரு நகரம் I .T நகரமாக மாறுவது உண்மையிலேயே முன்னோக்கிய ஒரு நிலை தானோ?
"எலக்ட்ரோனிக் சிட்டி"ன்னு அழைக்க பட்ட பெங்களூர் நகரம் இன்று I .T நகரமாக மாறிவிட்டது, அதே நிலை தான் கோவை நகருக்கா?
இந்த கணினி துறை வளர்ச்சியால் நாம் இழந்தது எனன?
இதனால் எங்களது விளை நிலங்கள் அடுக்கு மாடி குடியிருப்பாகவும், பெரிய பெரிய தங்கும் விடுதிகளாகவும் மாறி வருகிறது. வீடுகளில் மரங்கள் இருந்த இடங்களில் கூட மரங்களை அகற்றி ஒரு சிறிய அறையாவது கட்டி வாடகைக்கு விடும் அளவிற்கு, பணதேவைகளால் மனங்கள் மாறிபோய் விட்டன. ஏற்கனவே தற்போது இருக்கும் கூட்டத்தில், எங்கள் "நொய்யல் " வேறு தொலைந்து போயிற்று. பல குளங்களும் இருந்த இடம் தெரியாமல் குட்டி சுவராய், குடிசைகளாக மாறிவிட்டது. இப்போது இருக்கும் நிலையில் கோவைக்கு குடிநீர் ஆதாரமாய் இருப்பது சிறுவானியும், அத்திகடவும் தான். மக்கள் தொகை பெருக்கத்தில், புது புது கட்டிடங்களில் குடிபுகும் அனைவருக்கும் இருக்கும் தண்ணீர் பத்தாது , அதிலும் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு நிறைய தண்ணீர் செல்லும் போது, கிராமப்புறங்களில், கொஞ்சம் ஒதுக்கு புறங்களில் இருப்பவர்கள் தண்ணீருக்கு எங்கு செல்வார்கள்? 60 , 70 அடிகளிலேயே தண்ணிர் கிடைத்த இடங்களில் கூட தற்போது 500 அடிக்கும் மேல் தான் தண்ணீர் தென்படுகிறது. கோவையின் நீர் ஆதாரத்தை உயர்த்த இதுவரி எந்த திட்டமும் இல்லை. கேரள மாநிலத்துடன் சிறுவாணி அணைக்காக போட்ட 100 ஆண்டு கால ஒப்பந்தமும் நிறைவடையும் நேரத்தில், இவ்வளவு மக்களின் தண்ணீர் தேவை எப்படி பூர்த்தியாகும்?
பழையன கழிதலும், புதியன புகுதலும் ன்னு புது புது தொழில்கள் வருவதனால், பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் சரியே. ஆனால் I .T துறையினருக்கு கிடைக்கும் பல ஆயிர, லட்ச சம்பளத்திற்கு ஏற்ப விலைவாசியும் உயர்ந்து கொண்டே தான் போகும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட வருமானத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடத்த முடியுமாம்,10 ரூபாயில் கூட ஒரு நேர உணவு கிடைக்குமாம். ஆனால் கோவையில் எல்லாமே விலை அதிகம் தான், இனி இது யாருக்கான நகரம்? சாதாரண தொழில் செய்பவர்களால் இனி பிழைக்க முடியுமா?
"பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்" - உயரத்தான் முடியுமா?
தெரியாதவர்களாக இருந்தாலும் "வா கண்ணு சாப்பிட்டு போகலாம்" ன்னு அன்பா சொல்லிட்டு இருந்த மக்கள் பிழைக்க கஷ்டப்படும் சமயத்துல, வேறு மாநிலமக்கள் வந்து இங்கு பிழைப்பதை ஏற்று கொள்ளத்தான் வேண்டுமோ? எங்க ஊரு மக்கள் வாழ்க்கை நடத்த முடியாமல், எங்க மண்ணுக்கான அடையாளம் காணாம போக செய்யற இந்த வளர்ச்சி வேண்டாம்................
Thursday, August 12, 2010
Friday, July 16, 2010
குட்டீஸ்
கதைகளை கேட்பதோடு மட்டும் அல்லாமல் கதாபாத்திரமாக மாறிவிடுவது எங்கள் வீட்டில் ரொம்ப பிரபலம். அதாவது, பாட்டி வடை சுட்ட கதையில், நான் தான் பாட்டி, நான் வடை சுட, தேஜா காக்கா போன்று வடையை திருடி சென்று விடுவாளாம். கட்டிலின் மேலே சென்று உக்கார்ந்து விடுவாள். பின்பு நானே நரியாக மாறி சரியாக டயலாக் சொல்ல வேண்டும், அவ இஷ்ட பட்டா வடைய கீழ போடுவா, இல்லன்னா ஏமாந்த நரியாக திரும்பி வர வேண்டும், இது மாதிரி நாங்க படிக்கற ஒவ்வொரு கதைகளிலும் ஏமார்ந்த கதா பாத்திரம் என்னுடையது.
அந்த வரிசையில, கண்ணன் வெண்ணைய திருடி சாப்பிட்ட கதை தேஜாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கு போர் அடிச்சா, இந்த நாடகத்த தான் முதல்ல விளையாடனும்னு சொல்லுவா. போனா வாரம் ஒரு நாள்,
"அம்மா, நீ தான் கண்ணா மம்மியாம் , நீ வெண்ணைய கடைஞ்சு மேல வை" ன்னு சொல்லிட்டே இருந்தா.
நான் ஏதோ அசதியில இருந்ததால "நான் கண்ணா மம்மி எல்லாம் இல்ல, தேஜா மம்மி தான்" ன்னு சொல்ல, ஒரு குச்சி எடுத்துட்டு வந்து "மந்திரம் சொல்ற சுதி (or
சுஜி) சொல்றேன், தேஜா அம்மாவை, கண்ணா அம்மாவா மாத்துன்னு" சட்டுன்னு சொல்லவும், (உபயம்: சுட்டி டிவி, எனன தொடர்ல இப்படி வரும்னு தெரியல) அதுக்கு அப்புறமா விளையாடாம இருக்க முடியுமா!
(கதைகள சொல்றத காட்டிலும், நடிச்சு காமிக்கறதால creativity வளர கண்டிப்பா வாய்ப்பு இருக்கு, ஒரு டயலாக் இப்படிதான் சொல்லனும்னு இல்லாம, அந்த நிமிஷத்துல அவங்களுக்கு தோன்றத சொல்லும் போதும், இந்த கதைய இப்படி மாத்திக்க்கலாமான்னு குழந்தைகளே கேட்க்கும் போதும் நமக்கு அது புரியும், (ஆனா பல சந்தர்ப்பங்கள்ல நம்ம மூக்க உடச்சுடுவாங்க, கவனமா இருக்கணும்!)

Wednesday, July 7, 2010
காதல், கல்யாணம்
காதலுக்கும், கல்யாணதிற்க்கும் எனன வித்தியாசம்ன்னு ஒருத்தர் ஒரு முற்றும் துறந்த முனிவரிடம் கேட்டானாம், அந்த முனிவர் எந்த பதிலும் சொல்லாமல், ஒரு பெரிய தோட்டத்திற்கு அவரை அழைத்து சென்று "இது ஒரு ரோஜா தோட்டம், இந்த தோட்டத்துல போய் இருக்கறதுலயே பெரிய செடியா பறித்து வா, ஆனால் இரண்டு நிபந்தனை. ஒரே ஒரு செடி மட்டும் தான் பறிக்கணும், ரெண்டாவதா, நீ போன வழியிலேயே திரும்பி வரகூடாது ன்னு சொன்னாராம். சரின்னு அவரும் போயிட்டு கொஞ்ச நேரம் கழித்து வெறும் கையோட முனிவர் கிட்ட வந்தாராம். முனிவர் கேட்டார், "ஏனப்பா, வெறும் கையோடு வருகிறாய்? அங்கு பெரிய செடிகளே இல்லையா?". அதற்க்கு அவர் "நிறையவே இருந்தது, ஒரு செடிய பார்த்துட்டு, அடுத்ததா இருக்குற செடிய பார்க்கும் போது அது தான் ரொம்ப பெருசா தெரிந்தது , அப்படியே போனா அதற்க்கு அப்புறமா வர்ற செடிகள் எல்லாம் சின்னதா இருந்தது, போன வழியிலே திரும்ப வரகூடாதுன்ற நிபந்தனைனால வெறுங்கையோடு வர வேண்டியதா போச்சுன்னாராம்"
சரி பரவாயில்ல, இப்ப அடுத்ததா ஒரு சூர்யகாந்தி தோட்டத்துக்கு கூட்டிட்டு போனாராம். இதுல இருக்கறதுலயே ரொம்ப அழகான சூர்யகாந்திய பறிச்சிட்டு வா, இதற்கும் அதே நிபந்தனை தான்னு சொன்னாராம். தோட்டத்துக்குள்ள போன அவர் சட்டுன்னு சீக்கிரமா ஒரு சூர்யகாந்தி பூவோட வந்துட்டாராம். அந்த முனிவர் "ஏனப்பா போன உடனே வந்துட்ட, இருக்கற பூவிலயே இந்த பூதான் ரொம்ப அழகா இருந்ததான்னு கேட்டாராம்" "இல்லங்க, நான் முதல்ல பார்த்த அழகான பூ இதுதான், இத பறிச்சதுக்கு அப்புறமா வேற ஒரு பூவும் அழகா தெரிஞ்சது, ஆனா போன தடவை மாதிரி ஏமாற கூடாதுன்னு, இதையே பறிச்சுட்டு வந்துட்டேன்னு சொன்னாராம்"
முனிவர் சிரிச்சுட்டே இது தான் காதலுக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்ன்னு சொன்னாராம்.
Sunday, June 13, 2010
" சாதிகள் இல்லையடி பாப்பா "
" சாதிகள் இல்லையடி பாப்பா "
இப்படி பாரதியார் அந்த காலத்துலயே சாதிகள் ஒழிக்க்கப்படனும்னு நினச்சு தான் பாடினார். ஆனா 21 ம் நூற்றாண்டில, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஜாதி அவசியம்னு விவாதம் நடந்துட்டு இருக்கு.
அந்த காலத்துல அவரவர் செய்யும் தொழில்களின் அடிப்படையில ஜாதிகள் உருவாகி இருக்கலாம். உயர்ந்தவன், தாழ்ந்தவன்ற பாகுபாடெல்லாம் இருந்தது. ஆனா, சில கிராமங்கள் தவிர்த்து இப்ப அந்த நிலைமை எல்லாம் மாறிடிச்சு. தாழ்ந்த குலம்ன்னு சொல்லப்பட்ட பலரும், தற்போது நல்லா படிச்சு, நல்ல நிலமையில இருக்காங்க. இதுல கலப்பு திருமணம் செஞ்சவங்களும் இருக்காங்க. கலப்பு திருமணம் செய்யறவங்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்துட்டே தான் போகுது. இந்த நிலமையில, ஜாதி வாரியான கணக்கெடுப்புன்னா, ஓர் ஆணோட சாதிய ஒரு குடும்பம் முழுமைக்கும்னு எடுப்பாங்களா? இல்ல ஒரே குடும்பத்தில் இருந்தாலும் கணவன், மனைவின்னு ரெண்டு பேரோட ஜாதியையும் கணக்கில் எடுத்துக்குவாங்களா?
மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா ஒரு ஒரு ஜாதியை (அ) வகுப்பை சார்ந்தவர்கள் இவ்வளவு அப்படிங்கற விபரம் அறியப்படுமோ? அப்படி இருக்கும் பட்சத்தில் , சிறுபான்மை மக்கள் நாங்கள்னும், பெரும்பான்மை சமூகம் எங்களுடயதுன்னும் ஒரு பாகுபாடு வந்தால் இதுவே பல பிரிவினைகளுக்கும் வழிவகுக்குமே!
சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தினால் தான் பின் தங்கிய வகுப்பை சார்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கறாங்கன்னு தெரியும்னு லாலு பிரசாத் சொல்லியிருக்கார், இதுல நலத்திட்டங்கள் போய் சேருதோ இல்லையோ, அடுத்த "election " ல இன்னும் பல சாதி கட்சிகள் வரை வாய்ப்பு இருக்கு.
எவ்வளவு தான் படித்தவர்களாய் இருந்தாலும், இன்னமும் சாதியை பற்றிய பேச்சுக்கள் நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது. (இது யாரையும் புண் படுத்தும் எண்ணத்துடன் எழுதப்பட்டது இல்லை)
சென்ற வாரம் எங்கள் அலுவலகம் வாயிலாக ஒரு கருத்தாய்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தோம், அதன் பின், அந்த நிகழ்ச்சியில் வந்திருந்தவர்களில் இவர் என் வகுப்பை சார்ந்தவர், இவர் என் உறவினர் என்று என் நண்பர் கூறியதை கேட்கும் போது, உண்மையிலேயே மனவருத்தமாக இருந்தது, அவர் அதை ஒரு பெரிய விசயமாக எடுத்து சொல்லவில்லை என்பதை நான் அறிந்த போதிலும், நம் மனதில், நம் இனம், நம் குலம் என்ற பாகுபாடு நன்றாகவே விதைக்க பட்டு இருப்பதை உணர்ந்தேன்.
பொதுவாக ஒரு பொருள் தனக்கு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே, அந்த பொருளை பற்றிய தாழ்ந்த கருத்துக்கள் வெளிப்படும். அதுபோல, இந்த விஷயத்தை பற்றி பேசுவதால் என்னை தாழ்ந்த குலமென்று எண்ணி விட வேண்டாம். என்னை உயர்ந்த குலமென்று நினைக்க வேண்டும் என்பதற்காகவும் இதை சொல்லவில்லை.
இதிலும் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சில நூறுகள் செலவு செய்து சான்றிதல் வாங்கிய பலரையும் நான் அறிவேன். ஏன் எங்கள் வீட்டில் கூட, என் மூத்த சகோதரர் (FC ) , இந்த காரணத்தினாலேயே கல்லூரியில் இடம் கிடைக்க சற்று சிரமமாக இருந்தது, பின் அவரது முயற்சியால் சான்றிதல் கிடக்க பெற்ற நானும் என் இளைய சகோதரரும் பின் தங்கிய வகுப்பை சார்ந்தவர்கள். தற்போது, ஒவ்வொருவரும் வேலை நிமித்தமாக ஒவ்வொரு இடங்களில் இருக்கிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி , ஜாதியை சொல்வதானால் உண்மையான ஜாதியை சொல்வதா? இல்லை சான்றிதழில் இருக்கும் ஜாதியை சொல்வதா?
"சாதிகள் இல்லையடி பாப்பா" ன்னு எங்க சாதிய சேர்ந்த ஒருத்தர் சொல்லியிருக்கார்ன்னு விளையாட்டாக சொல்வார் என் நண்பர். எது எப்படியோ ,எந்த ஒரு விசயமுமே அழிவுக்கு வழிகாட்டாமல், ஆக்கத்திற்காக இருந்தால் சரிதான். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின், இந்தியாவின் No .1 சாதி (மக்கள் தொகையில்) எங்களுடயதுன்னு ஒரு கூட்டம் வராமல் இருந்தால் சந்தோசமே ....

Wednesday, May 26, 2010
ஸ்கூல்-2 தொடர்ச்சி
அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது என்பதை இந்த ஆண்டு 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் நன்றாகவே தெரிய வந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், இல்லை தனியார் பள்ளிகளை ஓரம் கட்டும் வகையில் அரசு பள்ளி மாணவி சாதித்து இருப்பது பெருமைக்குரிய விஷயம். அந்த மாணவியும் தமிழ் வழிகல்வி படித்தவரே. இந்த மாணவியின் சாதனையை தொடர்ந்து அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பவர்கள் எண்ணிக்கை இனி உயரலாம். ஆனால் ஆங்கில வழி கல்வி முறையில் உள்ள அரசு பள்ளிகள் மிக குறைந்த அளவே உள்ளது. அதுவும் 6 ம் வகுப்புக்கு மேல் தான். (ஆங்கில வழி கல்வியை நான் என்றும் ஆதரிப்பது இல்லை)
"traveller " அவர்கள் என்னிடம் பேசும் போது, நீங்களும் ஏன் உங்கள் குழந்தையை அரசு பள்ளிகளில் விடக்கூடாது என்று கேட்டார்? விடலாமே . கிட்டத்தட்ட நான் படித்ததும் அப்போதைய அரசு பள்ளிகளின் தரத்தை விட கொஞ்சம் அதிகமாக உள்ள பள்ளியில்தான்.
வேற சோப்பு போட்டு குளித்தாலே தன் பெண்ணிற்கு தன்னம்பிக்கை போயிடும்னு கவலைபடற அம்மாக்கள் இருக்கற இந்த கால கட்டத்தில நான் எப்படி இதை எல்லாம் எதிர் கொள்வது?
அதோட தனியார் பள்ளிகளுக்கு தான் "exposure " நிறைய இருக்கு, உதாரணத்துக்கு சொல்லனும்னா ஸ்கூல் activities ன்னு வந்தா, ஊர்லயே பிரபலமாக இருக்கற பள்ளிகளதான தேர்ந்து எடுக்கறாங்க , (யாரையும் தப்புன்னு சொல்லிட முடியாது,) Govt ஸ்கூல்ல இருக்கறவங்களுக்கு பல விஷயங்கள், பல போட்டிகள் நடக்கறது தெரியாமலே போயிடுது. (அறிவியல் கண்காட்சி உட்பட). ஆனா தனியார் ஆங்கில பள்ளிகளில் , நம்ம கிட்டயே காச வாங்கி , அவங்க ஸ்கூல் பஸ்லயே கூட்டிட்டு போயிடறாங்க , ஓஓ! ஊர்ல இப்படி எல்லாம் நடக்குதான்னு Govt ஸ்கூல் குழந்தைகள் ஆச்சர்யபட்டு கொஞ்சம் ஒதுங்கிதான் போவாங்க ,
ஏன், அரசு பள்ளிகள்ல படிச்சு அப்துல்கலாம் அய்யா, அண்ணாதுரை போன்றவர்கள் முன்னேரலயானு கேட்கலாம், சரி அவங்கள முன் உதாரணமா எடுத்துட்டு , நாளைக்கே அவள govt ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டு ஒரு சமயம் அவ govt ஸ்கூல்லயே படிச்சு பெரிய ஆளா வந்துட்டா பரவாயில்ல, எதோ ஒரு காரணத்துனால அது "reverse " ஆயிட்டா? நீங்க தான் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருகீங்க, என்னையும் ஏன் கஷ்ட்ட படுத்தறீங்க? ன்னு கேட்டா எனன நான் சொல்லுவேன்?
ஆங்கில வழி கல்வி கற்றால் மட்டும் பிற்காலத்துல கஷ்ட படமாட்டாளான்னு கேட்டா , பணம் புழங்குகிற பள்ளியில கொஞ்சம் நல்ல " status " ல அவ வளர்றதால பிழைக்க அதாவது சம்பாரிக்க தெரிஞ்சுக்குவா,
"சமூக அக்கறையோடு பிழைக்க தெரியாத நல்ல மனிதனாய் இருப்பதை காட்டிலும் , எந்த வித சூழ்நிலையும் கையாள கூடிய சாமர்த்தியம் உள்ளவளாய் வளர்ந்தால் போதும்."
அதை ஆங்கில வழி கல்வி தரும் என்று நம்புகிறேன். "நம்பிக்கை தானே வாழ்க்கை"

ஆங்கில வழியில் பயின்றவர்களை விட தமிழ் வழியில் பயின்றவர்கள் தமிழையும், ஏன் ஆங்கிலத்தயும் கூட தவறில்லாமல் எழுதுவார்கள் என்பதில் கொஞ்சம் கூட மாற்று கருத்து இல்லை, அதாவது ஒரு சில வார்த்தைகளில் "a " யும் "e " யும் வருவது குழப்பத்தை தரும், ஆனால் தமிழ் வழி கற்றவர்கள் "எந்த இடத்தில "a " எந்த இடத்தில "e " என்பதை மிக சரியாகவே உபயோகிக்கலாம் , இன்னும் சொல்ல போனால் "center " என்ற இந்த வார்த்தைக்கும் "centre " என்ற இந்த வார்த்தைக்கும் கூட ஆங்கில மீடியத்தில் படித்தவர்களை காட்டிலும் தமிழ் வழி கற்றவர்களினால் சரியாக பிரித்து அறிய முடியும் . அதோடு, எங்கும் கணினி மயமாகி போன இந்த கால கட்டத்தில் கண்ணினியில் திடீரென்று வரும் box ஐ படித்து புரியாமல் எல்லாவற்றுக்கும் "ஓகே" கொடுக்காமல் , சரியான தெரிவை செலக்ட் வேண்டுமானால் செய்யலாம் .
என் மகள் தேஜாவை தமிழ் வழிக்கல்வியில் சேர்த்துவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் , வாழ்க்கைக்கு தேவையான சில விஷயங்கள் அவளுக்கு தெரியாம போயிட்டா (!). பலரும் இருக்கும் இடத்தில சத்தமாக பேசி சிரித்து, மற்றவர்கள் கவனத்தை திசை திருப்ப தெரியாமல் போகுமோ, காக்கா பிடிக்க, ஐஸ் வைக்க தெரியாமல் போகுமோ, எவ்வளவு தான் knowledge இருந்தாலும் நுனி நாக்கு ஆங்கியம் பேசுபவர்களை கண்டால் அலர்ஜி ஆகி "YES ", "NO " , "THANK U" வை தவிர வேற எதுவும் பேச முடியாமல் , தன்னம்பிக்கை "ஓட" தனிமை படுத்தபடுவாளோ !. இப்ப தேஜாவ ஓரளவு பிரபலமான அந்த மூன்றெழுத்து பள்ளியில சேர்த்த போதிலும், ஏன் நீங்க இந்த பள்ளியிலையில சேர்த்தியிருக்க கூடாதுன்னு சிலர் கேட்கிற சமயத்துல , ஒரு சமயம் govt ஸ்கூல்ல சேர்த்ததுக்கு அப்புறமா , "அட govt ஸ்கூல்லா ன்னு கேவலமா கேட்டுட்டா , பாவம் தேஜா எனன ஆவாளோ? Govt ஸ்கூல்ல படிக்கறவங்க கிட்டத்தட்ட நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவங்களா தான் இருப்பாங்க, அப்படிப்பட்ட சூழ்நிலையில சமூகத்துல மேல் தட்டு வர்க்கத்தை போல அதிகாரத்தோட நடக்க தெரியாம போயிட்டா? அத விட அவளுக்கு பிற்காலத்துல யார்கிட்டயாவது எதுக்க்காகவாவது கோபம் வந்து ஆங்கிலத்துல "shit " ன்னு ஒரு வார்த்தைய உபயோக படுத்த தெரியாம "உனக்கு ஒரு ம------ம் தெரியலன்னு தப்பான வார்த்தைய உபயோக படுத்தி , அவளுக்கு கெட்ட பெயர் வந்துட்டா? இப்படி இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம் .
வேற சோப்பு போட்டு குளித்தாலே தன் பெண்ணிற்கு தன்னம்பிக்கை போயிடும்னு கவலைபடற அம்மாக்கள் இருக்கற இந்த கால கட்டத்தில நான் எப்படி இதை எல்லாம் எதிர் கொள்வது?
அதோட தனியார் பள்ளிகளுக்கு தான் "exposure " நிறைய இருக்கு, உதாரணத்துக்கு சொல்லனும்னா ஸ்கூல் activities ன்னு வந்தா, ஊர்லயே பிரபலமாக இருக்கற பள்ளிகளதான தேர்ந்து எடுக்கறாங்க , (யாரையும் தப்புன்னு சொல்லிட முடியாது,) Govt ஸ்கூல்ல இருக்கறவங்களுக்கு பல விஷயங்கள், பல போட்டிகள் நடக்கறது தெரியாமலே போயிடுது. (அறிவியல் கண்காட்சி உட்பட). ஆனா தனியார் ஆங்கில பள்ளிகளில் , நம்ம கிட்டயே காச வாங்கி , அவங்க ஸ்கூல் பஸ்லயே கூட்டிட்டு போயிடறாங்க , ஓஓ! ஊர்ல இப்படி எல்லாம் நடக்குதான்னு Govt ஸ்கூல் குழந்தைகள் ஆச்சர்யபட்டு கொஞ்சம் ஒதுங்கிதான் போவாங்க ,
ஏன், அரசு பள்ளிகள்ல படிச்சு அப்துல்கலாம் அய்யா, அண்ணாதுரை போன்றவர்கள் முன்னேரலயானு கேட்கலாம், சரி அவங்கள முன் உதாரணமா எடுத்துட்டு , நாளைக்கே அவள govt ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டு ஒரு சமயம் அவ govt ஸ்கூல்லயே படிச்சு பெரிய ஆளா வந்துட்டா பரவாயில்ல, எதோ ஒரு காரணத்துனால அது "reverse " ஆயிட்டா? நீங்க தான் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருகீங்க, என்னையும் ஏன் கஷ்ட்ட படுத்தறீங்க? ன்னு கேட்டா எனன நான் சொல்லுவேன்?
ஆங்கில வழி கல்வி கற்றால் மட்டும் பிற்காலத்துல கஷ்ட படமாட்டாளான்னு கேட்டா , பணம் புழங்குகிற பள்ளியில கொஞ்சம் நல்ல " status " ல அவ வளர்றதால பிழைக்க அதாவது சம்பாரிக்க தெரிஞ்சுக்குவா,
"சமூக அக்கறையோடு பிழைக்க தெரியாத நல்ல மனிதனாய் இருப்பதை காட்டிலும் , எந்த வித சூழ்நிலையும் கையாள கூடிய சாமர்த்தியம் உள்ளவளாய் வளர்ந்தால் போதும்."
அதை ஆங்கில வழி கல்வி தரும் என்று நம்புகிறேன். "நம்பிக்கை தானே வாழ்க்கை"
Tuesday, May 18, 2010
ஸ்கூல்- 2
ஸ்கூல்
summer vacation முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 10 , 15 நாட்களே உள்ள நிலையில், இன்னும் கல்வி கட்டணம் அறிவிக்க படாமல் இழுபறி நிலையே நீடிக்கிறது. அரசு அறிவித்துள்ள கட்டணத்தை ஏற்காத தனியார் பள்ளிகளில் சில , பள்ளியை மூடுவதாகவும் , இன்னும் சில பள்ளிகள் வழக்கம் போல செயல்படும், ஆனால் கல்வி கட்டணம் மட்டும் தற்போதைக்கு வசூலிப்பது இல்லை எனவும் அறிவித்துள்ளது இன்னும் சில பள்ளிகளில் வசூல் வேட்டையும் முடிவடைந்தது . இந்த நிலையில் அரசு அறிவித்த கட்டணத்தை கட்டாயம் ஏற்க வேண்டும் எனும் பட்சத்தில் அதிகப்படியான கட்டணத்தை மீண்டும் மாணவர்களிடம் ஒப்படைக்குமா பள்ளி நிர்வாகம்? இதனை நாட்களாக ஏகத்துக்கும் , pre -kg க்கு கூட குறைந்த பட்சம் Rs . 15000 / - வசூலித்து பழகியவர்களிடம் , 3 இல் ஒரு பங்கு கட்டணத்தை வசூலிக்க சொன்னால் இதை எப்படி ஏற்பார்கள். இதில் ஆசிரியர்களுக்கு தான் முதல் இழப்பு, இந்த வருடம் அவர்களின் ஊதியம் உயராது , இதனால் சில ஆசிரியர்கள் தவிர்த்து , பல ஆசிரியர்களும் தங்கள் ஊதியத்தை உயர்த்தி கொள்ள tuition நடத்தியே தீர்வார்கள். இதை தனியார் பள்ளிகளும் கண்டும் காணாமலும் விட்டு விடுவார்கள். இதனால் மனரீதியாக பாதிக்க படுபவர்கள் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் தான் ,
இதனை நாட்களும் கல்வி வியாபாரம் ஆக்கபடுவதை அரசு கண்டும் காணாமலும் விட்டு விட்டது ஏனோ ? எப்ப கல்வித்துறை தனியார் வசம் விடப்பதோ , அன்றிலிருந்து அவர்களின் நடவடிக்கைகளை கவனித்து இருக்க வேண்டும் , ஆனாலும் இந்த நிலையை இன்னும் வளர விடாமல், இப்பவாவது கல்விபுரட்சி , கல்வி கட்டண புரட்சி ஏற்ப்பட்டது நலமே .
கல்வியை சேவையாக நினைத்து பணிபுரிய எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் திரு.கல்யாணி அவர்களை போல ஒரு சிலரை பார்க்க முடிகிறது , மற்றபடி கல்வித்துறை நல்லா லாபம் அளிக்க கூடிய ஒரு தொழிலாகவே இருக்கிறது, பல புதிய வரவுகளான இன்டர்நேஷனல் pre -schools வெப்சைட் ல கூட franchisee option ஐ படித்தால் தெரியும், ஒரு pre -ஸ்கூல் ஆரம்பிக்க 5 முதல் 10 லட்சங்கள் வரை தேவை படும் . இதை ஒரே வருடத்தில் நீங்கள் பெற்றிடலாம் என்று இருக்கிறதை பார்க்கும் போது இது ஒரு நல்லா businees தானே. இங்கு எங்கள் கோவையில் , foundries வைத்திருந்த பல தொழில் அதிபர்களும் தற்போது இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இன்டர்நேஷனல் பள்ளிகளுக்கும் இந்த கட்டண விகிதம் பொருந்துமா என்பதும் தெரியவில்லை. உலகமயமாக்களில் corporate கலாச்சாரத்தில் கோவையில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 க்கும் மேற்பட்ட இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் வந்துவிட்டது. பல ஆயிரங்கள் வசூலிக்கபடும் இந்த பள்ளிகள் எல்லாம் பெயர் அளவிற்கு தான் இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் , பாடத்திட்டம் என்னவோ C B S E தான் , இதற்கும் அங்கீகாரம் கொடுத்து வளர்த்து வருகிறோம் ,
ஒரு புறம் சமச்சீர் கல்வி, பற்றிய சர்ச்சை நடந்து கொண்டிருக்க மாறுபட்ட இந்த கல்வி திட்டத்துக்கு என்று வரும் விடிவு காலம்? இதற்க்கு தீர்வு தான் எனன???????????
Tuesday, May 11, 2010
சமையல்
ரொம்ப நாட்களாக receipe எதாவது போடலாம்னு ஆசை . சரி தேஜாவுக்கு பிடிச்ச பன்னிர் பட்டர் மசாலா
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 50 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
முந்திரி - 50 கிராம்
கசகசா - 10 கிராம்
தயிர் - 50 கிராம்
டால்டா - 50 கிராம்
ஏலக்காய் - 4
பட்டை ,கிராம்பு - சிறிதளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - தேவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகதூள் - சிறிதளவு
மல்லித்தூள் - 1 /2 டீஸ்பூன்
பன்னிர் - 500 கிராம்
வெண்ணை - 5 கிராம்
உப்பு - தேவைக்கு ஏற்ப
முதல்ல வாணலியில எண்ணெய் சூடானதும் வெங்காயத போட்டு நல்லா வதக்கி நைசா அரச்சுக்கணும். தக்காளிய தனியா வேக வெச்சு அரைத்து வைக்கணும் . முந்தியையும், கசகசாவையும் தண்ணீரில் ஊற வெச்சு தயிர் சேர்த்து அரைக்கணும் .

இப்போ ஒரு வாணலியில டால்டா, கொஞ்சம் எண்ணெய் ஊத்தி ஏலக்காய், கிராம்பு , பட்டை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கணும், அடுத்ததா வேக வெச்சு அரச்ச தக்காளி போட்டு வதக்கிட்டு , அரச்ச வெங்காயத்த சேர்க்கணும் . கொஞ்சமா வதக்கினதுக்கு அப்புறமா மஞ்சத்தூள் , மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து வாடை போறவரை கிளறனும் . அப்புறமா அரச்சு வெச்சு இருக்கற முந்திரி, உப்பு , பன்னிர் சேர்த்து (பன்னிர எண்ணையில வறுத்து எடுத்துட்டா நல்லா இருக்கும்) வெண்ணை ஊற்றி ஒரு கொதிக்க விடவும், ம்ம்ம் ....... வாசம் வருதா .........
சப்பாத்தியோட தொட்டு சாப்பிட அருமையான டிஷ் .
Subscribe to:
Posts (Atom)