தேஜாவுடன் நான் அதிகம் செலவழிக்கும் நேரம் என்றால் அது அவளுக்கு சாப்பாடு ஊட்டும் நேரம் தான். சில சமயம் கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு "போதும், போதும்" என்று சொல்லுவதுண்டு. அந்த சமயத்தில் அவளது கவனத்தை திருப்ப, இன்னும் கொஞ்சம் சாப்பிட வைக்கலாமே என்று தோன்றும் போது, இன்னும் 10 வாய் (முறை) சாப்பிட்டால் போதும் என்று சொல்லி விடுவேன். இதனால, அவளும் கை விரல்கள் 10 அயும் நீட்டி ,ஒவ்வொரு வாய் சாப்பிடும் போதும் ஒரு ஒரு விரலை மடக்கி கொண்டே வருவாள். இதன் மூலம் decenting order பற்றி அறிந்து கொள்ளவும், 10 முதல் 1 வரை வேகமாகவும் சொல்ல தெரிகிறது.
அவளுக்கு எது பிடிக்குமோ அதிலிருந்தே கூட்டல் சொல்லிதர எண்ணினேன். இந்த இரண்டாவது டெர்ம்மில் count and write - வருகிறது. இதற்காக நாங்க பின்பற்றியது தான் இந்த முறை, தேஜாவுக்கு சாக்லேட் சாப்பிடுவதை காட்டிலும், டப்பாக்களில் சேர்த்துவைப்பதில், அதுவும் கலர் கலராக இருப்பதை பார்க்க பிடிக்கும். வீட்டிற்க்கு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கென்றே நிறைய வாங்கி வைத்திருப்போம். அதை வைத்தே இந்த activity செய்தோம். மொத்தமாக 10 சாக்லேட் எடுத்துகொண்டோம். எனக்கு 5 தேஜாவுக்கு 5 . நான் எவ்வளவு சாக்லேட் கொடுகிறேனோ அதே அளவுக்கு அவளும் தர வேண்டும். இரண்டும் சேர்த்து எவ்வளவு இருக்கிறதென்று கூட்டி அவள் சொல்லவேண்டும். அதோடு எங்கள் கைகளில் மீதியுள்ள சாக்லேட்களின் எண்ணிகையை கூட்டி, கை விரல்கள் 10 இல் இருந்து கழித்து சொல்ல வேண்டும். மீதமுள்ள சாக்லேட் 4 என்றால், 10 விரலில் 4 ஐ மடித்து 6 என்றும் சொல்லவேண்டும். சரியாகவே செய்தாள்.. இந்த கலர் புல் விளையாட்டு மூலம் , அவள் ஓரளவிற்கு கூட்டல், கழித்தல் பற்றி புரிந்தது போல இருந்தது. இந்த முறையில் கூட்டுத்தொகை 10 வரை மட்டுமே விளையாடினோம். மீண்டுன் ஒரு முறை விளையாடும் போது கூட்டு தொகையின் எண்ணிக்கையை அதிக படுத்த வேண்டும் என்றும் எண்ணி உள்ளேன்.
இது போல குழந்தை தனமாக எங்கள் activities இருப்பதாலேயே, எங்களது activities பற்றி வலைபக்கத்தில் எழுதுவதில்லை. தீக்ஷு வின் ப்ளாக் படித்ததற்கு பிறகே இதையும் கூட எழுதலாம் என்று எண்ணி எழுதி உள்ளேன்.
இதை தீக்ஷுவின் தளத்தோடு இணைத்துள்ளேன். தீக்ஷுவின் அம்மா , தீக்க்ஷுக்காக நிறைய activities செய்து வருகிறார். மிக உபயோகமான தளம். நிச்சயம் http://dheekshu.blogspot.com/ சென்று பார்க்கவும்.
என் அழைப்பை ஏற்று வந்து இணைந்ததற்கு நன்றி தேஜாம்மா. activities குழந்தைத்தனமாக இருந்தால் குழந்தை இன்னும் சந்தோஷமாக விளையாண்டு இருப்பாள். தேஜாவுக்கு இந்த activity மிகவும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteமீண்டும் நன்றி