
இந்த விளையாட்டு விளையாட குறைந்தது 3 பேராவது வேண்டும். முதலில் ஒருவர் ஒன்று என ஆரம்பிக்க அடுத்தவர் இரண்டு, மூன்று என வரிசையாக ஒவ்வொருத்தரும் சொல்லிகொண்டே வரவேண்டும். 10 ம், 10 இன் மடங்குகளும் வரும் போது காய்களின் பெயரை சொல்லவேண்டும். ஒருவர் சொல்லிய காய்களின் பெயரை மற்றவர் சொல்லகூடாது, இந்த வரிசையில் 10 இன் மடங்குகளின் பொழுது பழங்களின் பெயர்கள், போக்குவரத்து சாதனங்கள், மரங்களின் பெயர்கள், விலங்குகளின் பெயர்கள், ஏதாவதொரு பாடல் பாடலாம் என்று விளையாடினோம். இந்த முறையில் எண்களும் நன்றாக நினைவில் இருக்கும். அதோடு அவர்களுக்கு தெரிந்த விசயங்களை நினைவு படுத்த வசதியாகவும் இருக்கும். இதை ரொம்பவே interesting ஆகவே விளையாடினார்கள்.
No comments:
Post a Comment