"traveller " அவர்கள் என்னிடம் பேசும் போது, நீங்களும் ஏன் உங்கள் குழந்தையை அரசு பள்ளிகளில் விடக்கூடாது என்று கேட்டார்? விடலாமே . கிட்டத்தட்ட நான் படித்ததும் அப்போதைய அரசு பள்ளிகளின் தரத்தை விட கொஞ்சம் அதிகமாக உள்ள பள்ளியில்தான்.
ஆங்கில வழியில் பயின்றவர்களை விட தமிழ் வழியில் பயின்றவர்கள் தமிழையும், ஏன் ஆங்கிலத்தயும் கூட தவறில்லாமல் எழுதுவார்கள் என்பதில் கொஞ்சம் கூட மாற்று கருத்து இல்லை, அதாவது ஒரு சில வார்த்தைகளில் "a " யும் "e " யும் வருவது குழப்பத்தை தரும், ஆனால் தமிழ் வழி கற்றவர்கள் "எந்த இடத்தில "a " எந்த இடத்தில "e " என்பதை மிக சரியாகவே உபயோகிக்கலாம் , இன்னும் சொல்ல போனால் "center " என்ற இந்த வார்த்தைக்கும் "centre " என்ற இந்த வார்த்தைக்கும் கூட ஆங்கில மீடியத்தில் படித்தவர்களை காட்டிலும் தமிழ் வழி கற்றவர்களினால் சரியாக பிரித்து அறிய முடியும் . அதோடு, எங்கும் கணினி மயமாகி போன இந்த கால கட்டத்தில் கண்ணினியில் திடீரென்று வரும் box ஐ படித்து புரியாமல் எல்லாவற்றுக்கும் "ஓகே" கொடுக்காமல் , சரியான தெரிவை செலக்ட் வேண்டுமானால் செய்யலாம் .
என் மகள் தேஜாவை தமிழ் வழிக்கல்வியில் சேர்த்துவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் , வாழ்க்கைக்கு தேவையான சில விஷயங்கள் அவளுக்கு தெரியாம போயிட்டா (!). பலரும் இருக்கும் இடத்தில சத்தமாக பேசி சிரித்து, மற்றவர்கள் கவனத்தை திசை திருப்ப தெரியாமல் போகுமோ, காக்கா பிடிக்க, ஐஸ் வைக்க தெரியாமல் போகுமோ, எவ்வளவு தான் knowledge இருந்தாலும் நுனி நாக்கு ஆங்கியம் பேசுபவர்களை கண்டால் அலர்ஜி ஆகி "YES ", "NO " , "THANK U" வை தவிர வேற எதுவும் பேச முடியாமல் , தன்னம்பிக்கை "ஓட" தனிமை படுத்தபடுவாளோ !. இப்ப தேஜாவ ஓரளவு பிரபலமான அந்த மூன்றெழுத்து பள்ளியில சேர்த்த போதிலும், ஏன் நீங்க இந்த பள்ளியிலையில சேர்த்தியிருக்க கூடாதுன்னு சிலர் கேட்கிற சமயத்துல , ஒரு சமயம் govt ஸ்கூல்ல சேர்த்ததுக்கு அப்புறமா , "அட govt ஸ்கூல்லா ன்னு கேவலமா கேட்டுட்டா , பாவம் தேஜா எனன ஆவாளோ? Govt ஸ்கூல்ல படிக்கறவங்க கிட்டத்தட்ட நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவங்களா தான் இருப்பாங்க, அப்படிப்பட்ட சூழ்நிலையில சமூகத்துல மேல் தட்டு வர்க்கத்தை போல அதிகாரத்தோட நடக்க தெரியாம போயிட்டா? அத விட அவளுக்கு பிற்காலத்துல யார்கிட்டயாவது எதுக்க்காகவாவது கோபம் வந்து ஆங்கிலத்துல "shit " ன்னு ஒரு வார்த்தைய உபயோக படுத்த தெரியாம "உனக்கு ஒரு ம------ம் தெரியலன்னு தப்பான வார்த்தைய உபயோக படுத்தி , அவளுக்கு கெட்ட பெயர் வந்துட்டா? இப்படி இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம் .
வேற சோப்பு போட்டு குளித்தாலே தன் பெண்ணிற்கு தன்னம்பிக்கை போயிடும்னு கவலைபடற அம்மாக்கள் இருக்கற இந்த கால கட்டத்தில நான் எப்படி இதை எல்லாம் எதிர் கொள்வது?
அதோட தனியார் பள்ளிகளுக்கு தான் "exposure " நிறைய இருக்கு, உதாரணத்துக்கு சொல்லனும்னா ஸ்கூல் activities ன்னு வந்தா, ஊர்லயே பிரபலமாக இருக்கற பள்ளிகளதான தேர்ந்து எடுக்கறாங்க , (யாரையும் தப்புன்னு சொல்லிட முடியாது,) Govt ஸ்கூல்ல இருக்கறவங்களுக்கு பல விஷயங்கள், பல போட்டிகள் நடக்கறது தெரியாமலே போயிடுது. (அறிவியல் கண்காட்சி உட்பட). ஆனா தனியார் ஆங்கில பள்ளிகளில் , நம்ம கிட்டயே காச வாங்கி , அவங்க ஸ்கூல் பஸ்லயே கூட்டிட்டு போயிடறாங்க , ஓஓ! ஊர்ல இப்படி எல்லாம் நடக்குதான்னு Govt ஸ்கூல் குழந்தைகள் ஆச்சர்யபட்டு கொஞ்சம் ஒதுங்கிதான் போவாங்க ,
ஏன், அரசு பள்ளிகள்ல படிச்சு அப்துல்கலாம் அய்யா, அண்ணாதுரை போன்றவர்கள் முன்னேரலயானு கேட்கலாம், சரி அவங்கள முன் உதாரணமா எடுத்துட்டு , நாளைக்கே அவள govt ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டு ஒரு சமயம் அவ govt ஸ்கூல்லயே படிச்சு பெரிய ஆளா வந்துட்டா பரவாயில்ல, எதோ ஒரு காரணத்துனால அது "reverse " ஆயிட்டா? நீங்க தான் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருகீங்க, என்னையும் ஏன் கஷ்ட்ட படுத்தறீங்க? ன்னு கேட்டா எனன நான் சொல்லுவேன்?
ஆங்கில வழி கல்வி கற்றால் மட்டும் பிற்காலத்துல கஷ்ட படமாட்டாளான்னு கேட்டா , பணம் புழங்குகிற பள்ளியில கொஞ்சம் நல்ல " status " ல அவ வளர்றதால பிழைக்க அதாவது சம்பாரிக்க தெரிஞ்சுக்குவா,
"சமூக அக்கறையோடு பிழைக்க தெரியாத நல்ல மனிதனாய் இருப்பதை காட்டிலும் , எந்த வித சூழ்நிலையும் கையாள கூடிய சாமர்த்தியம் உள்ளவளாய் வளர்ந்தால் போதும்."
அதை ஆங்கில வழி கல்வி தரும் என்று நம்புகிறேன். "நம்பிக்கை தானே வாழ்க்கை"