Tuesday, May 11, 2010

சமையல்

ரொம்ப நாட்களாக receipe  எதாவது போடலாம்னு ஆசை . சரி தேஜாவுக்கு பிடிச்ச பன்னிர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 50  கிராம்
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250  கிராம்
முந்திரி - 50 கிராம்
கசகசா - 10 கிராம்
தயிர் - 50 கிராம்
டால்டா - 50 கிராம்
ஏலக்காய் - 4
பட்டை ,கிராம்பு - சிறிதளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - தேவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகதூள் - சிறிதளவு
மல்லித்தூள் - 1 /2  டீஸ்பூன்
பன்னிர் - 500 கிராம்
வெண்ணை - 5 கிராம்
உப்பு - தேவைக்கு ஏற்ப



முதல்ல வாணலியில எண்ணெய் சூடானதும் வெங்காயத போட்டு நல்லா வதக்கி நைசா அரச்சுக்கணும். தக்காளிய தனியா வேக வெச்சு  அரைத்து வைக்கணும் . முந்தியையும், கசகசாவையும் தண்ணீரில் ஊற வெச்சு தயிர் சேர்த்து அரைக்கணும் .

இப்போ ஒரு வாணலியில டால்டா, கொஞ்சம் எண்ணெய் ஊத்தி ஏலக்காய், கிராம்பு , பட்டை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கணும், அடுத்ததா வேக வெச்சு அரச்ச தக்காளி போட்டு வதக்கிட்டு , அரச்ச  வெங்காயத்த   சேர்க்கணும் . கொஞ்சமா வதக்கினதுக்கு அப்புறமா மஞ்சத்தூள் , மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து வாடை போறவரை கிளறனும் . அப்புறமா அரச்சு வெச்சு இருக்கற முந்திரி, உப்பு , பன்னிர் சேர்த்து (பன்னிர எண்ணையில வறுத்து எடுத்துட்டா நல்லா இருக்கும்)  வெண்ணை ஊற்றி ஒரு கொதிக்க  விடவும்,  ம்ம்ம் ....... வாசம் வருதா .........
சப்பாத்தியோட தொட்டு சாப்பிட அருமையான டிஷ் .

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தேஜாம்மா

    நார்த் இண்டியன் டிஷ்லயே எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த பன்னீர் பட்டர் மசாலா தான்...

    இந்த முறை கூட விடுமுறையில் சென்றிருந்த போது, இரு முறை வெவ்வேறு ஹோட்டலில் சாப்பிட்டேன்... இதன் டேஸ்டுக்கு ஈடு கொடுக்க இன்னொரு டிஷ் நான் இதுவரைக்கும் சாப்பிடவில்லை...

    பன்னீர் பட்டர் மசாலாவின் டேஸ்டுக்கு அருகில் வருவது மலாய் கொஃப்தா...

    ReplyDelete
  3. நன்றி thiru. கோபி.

    ReplyDelete