காதலுக்கும், கல்யாணதிற்க்கும் எனன வித்தியாசம்ன்னு ஒருத்தர் ஒரு முற்றும் துறந்த முனிவரிடம் கேட்டானாம், அந்த முனிவர் எந்த பதிலும் சொல்லாமல், ஒரு பெரிய தோட்டத்திற்கு அவரை அழைத்து சென்று "இது ஒரு ரோஜா தோட்டம், இந்த தோட்டத்துல போய் இருக்கறதுலயே பெரிய செடியா பறித்து வா, ஆனால் இரண்டு நிபந்தனை. ஒரே ஒரு செடி மட்டும் தான் பறிக்கணும், ரெண்டாவதா, நீ போன வழியிலேயே திரும்பி வரகூடாது ன்னு சொன்னாராம். சரின்னு அவரும் போயிட்டு கொஞ்ச நேரம் கழித்து வெறும் கையோட முனிவர் கிட்ட வந்தாராம். முனிவர் கேட்டார், "ஏனப்பா, வெறும் கையோடு வருகிறாய்? அங்கு பெரிய செடிகளே இல்லையா?". அதற்க்கு அவர் "நிறையவே இருந்தது, ஒரு செடிய பார்த்துட்டு, அடுத்ததா இருக்குற செடிய பார்க்கும் போது அது தான் ரொம்ப பெருசா தெரிந்தது , அப்படியே போனா அதற்க்கு அப்புறமா வர்ற செடிகள் எல்லாம் சின்னதா இருந்தது, போன வழியிலே திரும்ப வரகூடாதுன்ற நிபந்தனைனால வெறுங்கையோடு வர வேண்டியதா போச்சுன்னாராம்"
சரி பரவாயில்ல, இப்ப அடுத்ததா ஒரு சூர்யகாந்தி தோட்டத்துக்கு கூட்டிட்டு போனாராம். இதுல இருக்கறதுலயே ரொம்ப அழகான சூர்யகாந்திய பறிச்சிட்டு வா, இதற்கும் அதே நிபந்தனை தான்னு சொன்னாராம். தோட்டத்துக்குள்ள போன அவர் சட்டுன்னு சீக்கிரமா ஒரு சூர்யகாந்தி பூவோட வந்துட்டாராம். அந்த முனிவர் "ஏனப்பா போன உடனே வந்துட்ட, இருக்கற பூவிலயே இந்த பூதான் ரொம்ப அழகா இருந்ததான்னு கேட்டாராம்" "இல்லங்க, நான் முதல்ல பார்த்த அழகான பூ இதுதான், இத பறிச்சதுக்கு அப்புறமா வேற ஒரு பூவும் அழகா தெரிஞ்சது, ஆனா போன தடவை மாதிரி ஏமாற கூடாதுன்னு, இதையே பறிச்சுட்டு வந்துட்டேன்னு சொன்னாராம்"
முனிவர் சிரிச்சுட்டே இது தான் காதலுக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்ன்னு சொன்னாராம்.
No comments:
Post a Comment