Monday, February 22, 2010

'ஹைடி'- ithu vilambaram alla

'ஹைடி'
இது விளம்பரம் அல்ல.
ஹைடி இது சுட்டி டிவிஇல் தினமும் காலை ஒளிபரப்ப படும் ஒரு தொடர், சுட்டி டிவி இல் வரும் ஒரு உருப்படியான நிகழ்ச்சி. ஹைடி மலையில் வசிக்கும் ஒரு சின்ன பெண். அங்க இருக்கற இயற்கையை ரசிச்சுகிட்டு, இயற்கையோட வாழறா. அதுல காமிக்கிற மலைகளும் அவங்க வாழ்க்கையையும் ரொம்ப அழகா இருக்கு, ஹைடி பட்டாம்பூச்சி கூடவும், ஆட்டு குட்டி கூடவும் பேசி விளையாடறத பார்க்கும் பொழுது  நமக்கே ஆசையா இருக்கு,இதுல கிராமத்து வாழ்க்கைக்கும், நகரத்து வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசமும் ரொம்பவே அழகா நமக்கு புரியும், உண்மையிலே குழந்தைகள் நாய், பூனை பார்த்து எல்லாம் பயப்பட மாட்டங்க, அதோட பேசுவாங்க , ரொம்ப அன்பா விளையாடுவாங்க, நாம தான் வளந்ததுக்கு அப்புறமா இதெல்லாம் ரசிக்க மறந்திடறோம் . அதுல காமிக்கற மாதிரி ஒரு கிராமமும் இப்ப இருக்குமான்னு தெரியல,  ஒவ்வொரு சீசன் னா கதை நகருது அதனால சீசன் பதியும் குழந்தைகளுக்கு நாம சுலபமா கத்து  கொடுக்க முடியுது, அது மட்டும் இல்லாம உயிர்களிடத்து அன்பு வேணும்ங்கறத உணர வைக்குது ,ஹைடி ஸ்கூல்க்கு போகணும்னு விருப்பப்படும் போது அவங்க தாத்தா  சொல்லுவாரு பள்ளிக்கூடம் கத்துதரத விட பல மடங்கு கிராமத்துல நீ கத்துக்கலாம்னு .  அது உண்மை தான . ஒரு செடி எப்படி வளர்துன்னு நாம புக் ல படத்த  பார்த்து தான தெரிசுகறோம் .அத மனப்பாடம் செஞ்சு தான மனசுல நிறுத்திகிறோம்.  அனுபவத்துல தெரியறது இல்ல .
                              இயந்திர தனமா இயங்கிட்டு இருக்கற நாம நல்ல பல விசயங்கள ரசிக்க மறந்திடறோம் எதுக்காக பணம் சம்பாதிக்கறோம், நாம எத நோக்கி போயிட்டு இருக்கோம் இதெல்லாம் நம்மக்கே தெரியாது இயற்க்கைய அழிச்சுட்டு செயற்கையான விசயங்களுக்கு நாம முக்கியத்துவம் கொடுக்கறோம் அதையே ரசிக்கவும் செய்யறோம் . நாமும் நம்ம குழந்தைகளுக்கு இயற்க்கைய ரசிக்க பழக்கலாமே .
இன்னும் வரும்

1 comment:

  1. //இயந்திர தனமா இயங்கிட்டு இருக்கற நாம நல்ல பல விசயங்கள ரசிக்க மறந்திடறோம் எதுக்காக பணம் சம்பாதிக்கறோம், நாம எத நோக்கி போயிட்டு இருக்கோம் இதெல்லாம் நம்மக்கே தெரியாது இயற்க்கைய அழிச்சுட்டு செயற்கையான விசயங்களுக்கு நாம முக்கியத்துவம் கொடுக்கறோம் அதையே ரசிக்கவும் செய்யறோம் . நாமும் நம்ம குழந்தைகளுக்கு இயற்க்கைய ரசிக்க பழக்கலாமே .//

    மிக சரியாக சொன்னீர்கள்...

    வாழ்க்கையையே நாம் அனைவரும் ஒரு இலக்கில்லாமலும், தெளிவில்லாமலுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... அதை நன்றாக விளக்கி உள்ளீர்கள்...

    கண்டிப்பாக குழந்தைகளுக்கு இயற்கையை ரசிக்க பழக்கப்படுத்த வேண்டும்... கூடவே அதை பாதுகாக்கவும்....

    நல்ல இடுகைக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete