Thursday, February 18, 2010
ஸ்கூல்
தேஜா இப்போது நர்சரியில் படிக்கிறாள். கடந்த ஒரு வாரமாக ஹோம் வொர்க் கொடுக்கிறார்கள். முதலில் STANDING லைனில் ஆரம்பித்து E F I T இந்த மாதிரி எழுத்துக்களை எழுத பழக்க படுத்துகிறார்கள். முதல் இரண்டு நாட்கள் எழுத ரொம்ப ஆசை பட்டாள். இபோது அவளுக்கு எழுதவே விருப்பம் இல்லை. ஒரு வகையில் பார்த்தால் பாவமாக இருக்கு. ஆனால் இந்த ஹோம் வொர்க் குடுக்கறதுக்கு முன்னாடி அவளாகவே சுவற்றிலும், எந்த புக் கிடைச்சாலும் அதுலயும் ரொம்பவே கரெக்டா A, B, T,H E NNU சில எழுதுக்கள எழுதிட்டு இருந்தா. கண்டிப்பா HOMEWORK செய்யணும்ணு சொன்னா என்னைபார்த்து பார்த்து சிரிச்சுகிட்டே இருக்கறா . அவ சிரிப்ப பார்த்ததுக்கு அப்புறமா என்ன பண்றது.ஆனாலும் எப்படியோ தாஜா பண்ணி எழுத வைக்கறது தான் . நானெல்லாம் 5 வயசுல தான் எழுதவே ஆரம்பிச்சேன் . ஆனா இப்ப இருக்கற EDUCATION SYSTEM வேறமாதிரி இருக்கு, இங்க ஒரு SCHOOL ல PRE-KG (2 1/2 YRS) சேக்கறதுக்கு குழந்தைக்கு INTERVIEW. அந்த குழந்தை ALPHABET சொல்லனுமாம். உங்க அப்பா அம்மா எங்க வொர்க் பண்றாங்கன்னு கேட்டா சொல்ல தெரியணுமாம். அப்படிசொல்ல தெரியலன்னா ADMISSION கிடையாது என்னை கொடுமை இது, இந்த மாதிரியான ஸ்கூல நாம தேர்ந்தெடுக்க கூடாதுன்னு நினைச்சா சாதாரண MATRIC SCHOOLAYUM INTERVIEW IRUKKUNU சொல்லறாங்க .
தற்போது இருக்கும் பல நர்சரி பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் மேலை நாட்டு முறையை பின்பற்றுவதாக சொல்லுகிறார்கள் . அவர்கள் எதோ MONTESSORI அம்மாவின் வாரிசுகளாக தங்களை நினைச்சுட்டு அவரது கல்வி முறைப்படி ஒரு கோடு கூட பிசகாமல் மாணவர்களை வழிநடத்துபவர்கள் மாதிரி தான் பேசுவாங்க. அதிலும் மிக பெரிய கொடுமை
MONTESSORI அம்மையார் சொன்னது என்னவோ தாய் மொழி கல்வி தான் சிறந்ததுன்னு , அவரோ இத்தாலியை சேர்ந்தவர் அவருக்கும் ஆங்கில வழி கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, ஆனா இங்க எல்லா ஸ்கூல் ஆங்கிலதேயே அடிப்படைய வெச்சு கற்று கொடுக்கும் சூழ்நிலை. ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே, அறிவு அல்ல என்பது பலருக்கு புரிவதில்லை .
இது புரிஞ்சாலும் வேற தமிழ் வழி கல்வி கர்பிக்கற ஸ்கூல் அருகில் இல்ல . அதனால வேற வழி தெரியாம நானும் இங்கிலீஷ் மீடியம் தேடி ஓட வேண்டி இருக்கு, இதுலயும் ஒவ்வொரு SCHOOLYUM ஒவ்வொரு மாதிரியான கல்வி திட்டம் MATRIC, CBSE ன்னு இதுல எத தேர்ந்தேடுக்கரதுன்னு ஒரே குழப்பம் . சமசீர் கல்வி திட்டம் வரதுக்கு முன்னாடியே பல ஸ்கூல்ம தங்களோட ஸ்கூல் ல CBSE க்கு மாதிடரங்க . இன்னும் ஸ்கூல்ல பத்தின பல விஷயங்கள் இருக்கு அடுத்த பதிவிலயும் இது தொடரும்.
Subscribe to:
Post Comments (Atom)
குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நாம் பரீட்சை எழுதி பாஸ் பண்ணினால் தான் அட்மிஷன்...
ReplyDeleteஇந்த கொடுமையை எங்கே போய் சொல்வது...
அதுவும், 10 பேர் உட்கார்ந்து செல்லும் வாகனத்தில் 20/25 குழந்தைகளை அடைத்து கொண்டு செல்கிறார்கள்...
நீங்கள் குறிப்பிட்டது போல், பல வகைப்பட்ட பாட திட்டங்கள்...
நமக்கே தலை சுற்றுகிறது... படிக்கும் பிள்ளைகளின் கதியை நினைத்தால்... யப்பா...