சமீபத்தில் ஆனந்த விகடனில் திரு. கோபிநாத் அவர்கள் நிறங்களை பற்றி ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அதை படிக்கும் போது எனக்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது,
நான் சிறுவயதில் நன்றாகவே படிப்பேன். முதல் இரண்டு , மூன்று ரேங்க்குக்குள் எடுக்கும் அளவிற்கு (சத்தியமாக) . எந்த வேலையையும் என்னிடம் கொடுத்தால் பொறுப்பாகவும் முடிப்பேன் , சில நேரங்களில் பரீட்சை விடை தாள்களை திருத்தும் பணியையும் ஆசிரியர்கள் எங்களிடம் தருவார்கள்.
ஆனால் எங்கள் பள்ளிக்கு யாரவது சிறப்பு விருந்தாளிகள்
வந்தால் மட்டும் அவர்களை வரவேற்க அனுப்ப மாட்டார்கள், ஏன்னா நாங்க எல்லாம் மாநிறமாக இருக்கும் காரணத்தால் , அந்த வயதில் எதிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வ கோளாறு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் எதுலயும் விருப்பம் இல்லாமல் அழகுல மட்டும் தனி கவனம் செலுத்த ஒரு கூட்டம் இருக்கும், நல்லா நிறம் கொண்ட அந்த பெண்கள் எல்லாம் எங்கள் வகுப்பை சேர்ந்த ஆனால் பெரிய பெண்கள், அவர்களாக எதாவது பேசி அவர்களாக சிரித்து கொண்டே இருப்பார்கள், எதற்காக சிரிக்கிறார்கள் என்று புரியாமல் இருக்கற கூட்டம் நம்முடையது, அதுக்கு மேல கேட்டா நீங்கள்லாம்
சின்ன பொண்ணுங்க உங்களுக்கு எல்லாம் சொன்னா புரியாதுன்னு சொல்லுவாங்க.
அந்த பெண்களை மட்டுமே தெரிவு செய்து அந்த சிறப்பு விருந்தினர்க்கு அன்பளிப்பு அளிக்க செய்யும் போது எங்களை போல சிலருக்கு எப்படி இருக்கும்? அந்த மாதிரி சமயத்துல கொஞ்சம் ஒதுங்கியே தான் இருப்போம் .அப்ப தான் நாமளும் சிவப்பா பிறக்கலேன்னு தோன்றியது . நாமாக நிறத்தை பற்றிய ஒரு எண்ணத்தை நினைக்காத போதும் , அந்த பாகுபாட்டை பள்ளிகளே செய்தன .
(ஆனா நல்லா படிக்கற பொண்ணுங்க எல்லாம் சுமாராத்தான் இருப்பாங்களோ! எங்க கிளாஸ்ல அப்படி தான் இருந்தோம் .)
டீன் ஏஜ்ஜில் நிறம் ஒரு பெரிய பிரச்சனையே . நானும் என் மற்ற மாநிற தோழியரும் கண்ட கண்ட அழகு சாதன பொருட்களையும் வாங்கி முயற்சித்தோம், ஒன்றும் பலன் இல்லை, (அப்ப நடந்த சில போட்டிகளில் நாங்க கலந்துக்கவே இல்ல வேணும்னே தான் )அந்த சமயத்துல தான் எங்களது ஆதங்கத்தை எங்கள் கணித ஆசிரியருடன் பகிர்ந்து கொண்ட போது அவர் சொன்னது இது தான் , (அவர் எப்போதும் நன்றாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பார்). இன்னும் உன் திறமையை வளர்த்து கொள் . உன் திறமையை கண்டு பலரும் உன்னை திரும்பி பார்க்கும் படி செய் என்று என்னையும் என் தோழியரையும் உற்சாக படுத்தினார்கள்.
அழகுங்கறது நிரந்தரம் இல்லன்னும் சொன்னார். அதுக்கு அப்புறமா அழகுக்காக செலவு செய்ய, நேரமோ , பணமோ செலவழிக்க வில்லை,
அதன் பின் இன்னும் அதிகமாகவே படித்தோம் அவர் சொன்னது போல நல்ல மதிப்பெண்களையும் பெற்று, இன்று நன்றாகவே இருக்கிறேன் , எங்கோ கேள்வி பட்டது ,
சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான்
கருப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்பு தான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
மனிதனின் எண்ணங்களில் இருக்கிறது.................
Sunday, March 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
nan kelipattathu,,, elllarukum therinjathutha
ReplyDelete(super star stylea )
vella udamla karuppu pulli eruntha athu matcham
aana
karupu udamla vellla pulli eruntha theamal,,
(one more from sivaji film)
rajini: yea ma enna karupa peattha ?
vadivukarasi: vellaya eruntha azlukayeaduva !!!!!!!!!!!!