தேஜாவுக்கு இந்த வாரத்துடன் பள்ளி நிறைவு பெறுகிறது, எனக்கு டென்ஷன் ஆரம்பிச்சாச்சு, எனன செய்யறது இன்னும் இரண்டரை மாதங்கள், தேஜாவும் ரஞ்சித்தும் (அண்ணா பையன்) பண்ற அட்டுழியம் தாங்க முடியாது .நாம வீட்ல இருந்தா ஏதாவதொரு ஆக்டிவிட்டில நேரம் போய்டும், நாம காலையில ஆபீஸ் வந்தா போற டைம் சொல்ல முடியாது, இப்போதைக்கு எங்க அம்மா தான் பார்த்துக்கறாங்க, அவங்களுக்கும் இப்ப உடம்பு சரி இல்ல , மாமியாரோ ஹார்ட் பேசன்ட்,
எதாவது கேம்ப்க்கு அனுபலம்னா அதுக்கான வயசும் இல்ல, 3 ,3 1 / 2 வயசு குழந்தைகள வெச்சு எனன பண்றது, அப்படியே எதாவது பாட்டு கிளாஸ் , டான்ஸ் கிளாஸ்ல விட்டாலும் 1 மணி நேரம் தான் . அதுக்கு அப்புறம் ?
ஸ்கூல் இருக்கற நேரங்கள்ல சாப்பிடறதும், தூங்கறதும் நேர நேரத்துக்கு நடக்கும் இனி மேல் அது சாத்தியம் இல்ல, காலையில ஸ்கூல் கிளம்பற அவசரத்துல ஆட்டோ வந்துடும்னு சொல்லியே எதாவது ஊட்ட முடியும், இனி சாப்பிட (நாம கிளம்பறதுக்கு உள்ள ஒரு வேலை முடியுமேன்னு) சொன்னா "எனக்கு பசிக்க்கலாமா"னு சொல்லுவா எங்க வீட்டு பெரிய மனுசி (தேஜா தான்) .
தூங்கறதுக்கும் அப்படிதான் ...
எனன மாதிரியான தாய்மார்கள் எனன பண்றாங்கன்னு தெரியல , யாராவது ஒரு ஐடியா கொடுங்களேன் ப்ளீஸ்.... ப்ளீஸ்....
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
ungala madhri welaiku pora pengalukendra.... summer vacation la matumae.... children care center well developed programe planoda arambokanum.... werum sapadu tharadhum.....thoongaweikaradhum matumae ilama..... positive and well being activitiesum.... awangala adhigama sirikawum sindhikawum weikara madhri characters idhae eduthu nadathanum.... mukiyama iyarkai sulalla idam amaindhu irukanum....
ReplyDeleteprabha ka.... ungaluku thewaiyana alosanaiyae ipo solamudila....wisarikaren... wiraiwil...