Thursday, March 4, 2010

யாருக்கும் வெட்கமில்லை

கடந்த 2 நாட்களாக பரபரப்பான செய்தியே பரமஹம்ச நித்யானந்தர் பற்றியது தான்.
இந்த விசயத்திற்கு இவ்வளவு ஆர்பாட்டம்  வேண்டுமா? இதில் நித்யானந்தர் செய்தது மட்டும் தான் குற்றமா.? என்னை நம்ம்புங்கள்  என்று அவனா சொன்னான், அவனது பேச்சும் கருத்துக்களும் பிடித்ததென்று பின்னாலயே சென்றதே ஒரு கூட்டம் அவர்கள் மேல் பிழை இல்லையா?  காவி உடுத்தி கொண்டு யார் எனன சொன்னாலும் கேட்க்க ஆட்டு மந்தையாய் சுற்றிய கூட்டதார்க்கு எங்கு சென்றது அறிவு,

அவனது லீலையை வெளிகொன்று வரும் பொருட்டு அந்த பெண்ணின் மானமும் அல்லவா போகிறது . இதில் கண்டிப்பாக அந்த பெண்ணை குறை சொல்ல முடியாது  ஒரு பெண் தனக்கு பிடித்தமானவருடன் இருக்கிறாள்,இதை எப்படி குறை சொல்ல முடியும் ?அது சரியோ தவறோ அவளுக்கு பிடித்தது ,ஆனால் அவளுக்கும் வெட்கம் இருக்கும்,

 அந்த அந்தரங்கத்தை பறை சாற்றிய ஊடகம்  செய்தது மட்டும் சரியாகுமா?
ஊடகத்திற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது . இப்படி ஒரு விஷயத்தை அப்பட்டமாக பட்ட பகலில் காண்பிப்பது சரியா? ஒவ்வொரு பதினனது நிமிடத்திற்கு ஒரு முறை , இதுவும்  ப்ளூ பிலிம் மாதிரி தானே ? அந்த சேனலின் T R B  ரேட் உயர்வதற்காக எதை வேண்டுமானாலும் காண்பிக்கலாமா? அப்ப அவர்களின் வக்கிர எண்ணங்களை எனன சொல்ல்வது?
10 மணி செய்திகளுக்கென்று ஒரு சிறப்பே இருக்கிறது, அன்றைய நாளின் மொத்த நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும் , சில குடும்பங்களில் ஒரு வழக்கம் உண்டு, 10 மணி செய்தியை குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒன்றாக தான் பார்ப்பார்கள், இதில் நடுத்தர வயதுள்ள குழந்தைகளும் அடங்கும், செய்திகளுக்கான சேனலில் இப்படி கொஞ்சம் கூட சமுக அக்கறை இல்லாமல் நடந்நது கொண்ட அந்த தொலை காட்சியை எனன சொல்வது , முன்பெல்லாம் இது மாதிரியான செய்திககள்
காண்பிக்கும் பொழுது நிறைய மறைக்க பட்டு சரியாக தெரியாதது மாதிரி இருக்கும் ஆனால் இப்போது அப்பட்டமாக காண்பிக்கிறார்கள் ,  குழந்தைகளுடன் நியூஸ் பார்க்க கூட முடிவதில்லை.

பிரேமானந்தா, அர்ச்சகர், கல்கி , நித்யானந்தர் இந்த வரிசையில் அடுத்தது யாரோ ????????
ஆக மொத்தத்தில் ஏமாற ஒரு கூட்டம் இருந்தால் ஏமாற்ற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்.

2 comments:

 1. சரியாக சொன்னீர்கள்....

  ஏமாறும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை, இது போன்ற ஏமாற்றும் சாமியார் கூட்டமும் இருக்கும்..

  மன அமைதியை நாடி செல்லும் பக்தர்களின் மனங்களை வதைப்பதற்கு இவர்களுக்கு “கருட புராணம்” படி என்ன தண்டனையோ??

  இனி மேலும் இது போன்றோரை நம்பி ஏமாறாமல் மக்கள் இருக்க வேண்டும்...

  சிறந்த ஆற்றாமையை வெளி கொணர்ந்த அழகான பதிவு

  வாழ்த்துக்கள் தேஜா அம்மா....

  நேரமிருப்பின் என் வலைகளின் பக்கமும் வாருங்களேன்...

  www.jokkiri.blogspot.com

  www.edakumadaku.blogspot.com

  ReplyDelete
 2. Gopi avargalukku nandri, ungal pathivugal varaverkka padukirathu,

  ReplyDelete