சென்ற வாரம் "இன்று நான் நாளை நீ" என்ற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரி ஒன்றை தயாரித்தோம். அதில் முதியோர் இல்லங்களில் இருக்கும் பெரியர்வர்களின் ஆசைகளையும் , அவர்களின் மனதில் இருப்பதையும் ரொம்பவே தெளிவாக சொன்னார்கள். அதில் ஒரு தாத்தா சொன்னார் 'வீட்டில் இருப்பதை விட இங்கே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று, அத்துடன் அங்கு இருந்த ஒரு பாட்டி நிறைய புத்தகங்களை படிப்பவர் போலும், நிறைய தத்துவ வார்த்தைகளையும் உபயோகித்தார், அவருக்கு அவரது பேர குழந்தைகளை கொஞ்ச கொஞ்சமும் விருப்பம் இல்லை எனவும் வெறுப்புடன் தெரிவித்தார் , அத்துடன் "நான் எப்பவும் புத்தகங்களை தான் படிக்க வேண்டுமா , ஆசை, பாசம் எப்படின்னு தெரிஞ்சுக்க வேணாமா" என்றும் சொல்லி இருந்தார், தனது மகனின் வாரிசுகளை இந்த பாட்டி கொஞ்ச அனுமதி மறுக்க பட்ட வேதனையில் இருந்தார் பாவம்
அந்த சமயத்தில் என் தோழி ஒருவர் நீண்ட நாட்களுக்கு முன் சொன்ன ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது . அவளுக்கு திருமணம் முடிந்து, அவளுக்கும் அவளது கணவருக்கும் சரியான புரிதல் ஏற்படுவதற்கு முன்னே குழந்தையும் உண்டானது . அந்த சமயத்திலும் அவளுக்கும் அவள் மாமியாருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது, அதனால் அவளுக்கும் அவளது கணவருக்கும் ஏற்படும் கருத்து மோதல்களுக்கு அவளது மாமியாரே காரணம் எனவும் . தன கணவரை தன்னிடம் இருந்து பிரிக்கிறார் என்றும் எண்ணினாள்அவள் 6 மாத கர்ப்பிணியாய் இருந்த சமயத்தில் அவளது மாமியார் வீட்டை விட்டு(அவளது கணவரையும் சேர்த்தே) துரத்தி விட்டார், கணவனோ அம்மா பிள்ளையாக இருந்தார், இருவரையுமே வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர், அப்போதே அந்த பெண் சொல்லுவாள் "என் குழந்தையை என் மாமியாரிடம் தர மாட்டேன்" என்று , குழந்தை பிறந்த பின் மாமியார் , வீட்டிற்கு அழைத்த போது அவரிடம் குழந்தையை தர மறுத்து விட்டாள்.அப்பொழுது அவள் சொன்ன வார்த்தை " என்னையும் என் கணவரையும் பிரித்தது போல தன்னையும் தன் குழந்தையையும் பிரித்து விடுவார்கள்" என்று
அதே போல இன்னொரு பெண்ணின் மாமியாரோ, "உனது சமபளதிற்க்காக தான் என் பையனுக்கு உன்னை திருமணம் செய்து கொடுத்தேன், அத்துடன் எங்களுக்கு இருக்கும் கடன்களை நீ அடைத்த பின் குழந்தை பெற்று கொள்" என்றும் கூறினார்களாம் , இந்த மாதிரி மாமியார்கள் வயதான பின் அந்த மருமகள்கள் எப்படி கவனிக்க போகிறார்கள் ,
இதில் யாரை குறை சொல்வது? மருமகளின் மனச பத்தி கொஞ்ச கூட யோசிக்காமல் பல கஷ்டங்கள கொடுக்கிற மாமியார கவனிக்கலைன்னு எப்படி சொல்ல முடியும், ஆனா அதே சமயத்துல நல்ல மாமியார் மாமனார் இருந்தும் அவங்கள தங்களோட வெச்சுக்க பிரிய படாத எத்தனையோ மருமகள்களும் உண்டு,
அதுவும் மாமியார் மாமனார் என்று இருவரும் இருக்கும் போது கூட அவர்களுக்கு எதுவும் பெரிய பிரச்சனையாக தெரியாது, யாரவது ஒருத்தர் மட்டும் இருந்து தனிமைய உணரும் போது தான்...................
Thursday, April 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Very nice every one pls consider their feelings.
ReplyDelete