Tuesday, December 28, 2010

எண் விளையாட்டு

இந்த விளையாட்டு விளையாட குறைந்தது 3  பேராவது வேண்டும். முதலில் ஒருவர் ஒன்று என ஆரம்பிக்க அடுத்தவர் இரண்டு, மூன்று என  வரிசையாக ஒவ்வொருத்தரும் சொல்லிகொண்டே வரவேண்டும். 10 ம், 10  இன் மடங்குகளும் வரும் போது காய்களின் பெயரை சொல்லவேண்டும். ஒருவர் சொல்லிய காய்களின் பெயரை மற்றவர் சொல்லகூடாது, இந்த வரிசையில் 10  இன் மடங்குகளின்  பொழுது  பழங்களின் பெயர்கள், போக்குவரத்து சாதனங்கள், மரங்களின் பெயர்கள், விலங்குகளின் பெயர்கள், ஏதாவதொரு பாடல் பாடலாம் என்று விளையாடினோம். இந்த முறையில் எண்களும் நன்றாக நினைவில் இருக்கும். அதோடு அவர்களுக்கு தெரிந்த விசயங்களை   நினைவு படுத்த வசதியாகவும் இருக்கும். இதை ரொம்பவே interesting  ஆகவே விளையாடினார்கள்.

Happy x -mas

தேஜாவின் ஆசிரியருக்கு   நாங்களே செய்து  பரிசளித்த x -mas tree .

Thursday, December 16, 2010

சிலைவடித்தேன் என் சின்ன பெண்ணிற்கு......

நிறைய வேலைகள் இருந்ததால் (அரையாண்டு தேர்வுக்காக தேஜாவை தயார் (! ) செய்ய நேரம் ஒதுக்கியதாலும், அதிக குளிர் மற்றும் மழை காரணமாக எங்களுக்கு உடல்நலம் சரி இல்லாததாலும்) பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை.. எனினும், எங்களது விளையாட்டுக்கள் வழக்கம் போலத்தான்... சிலநேரங்களில் ரஞ்சித்தும், தேஜாவும் துரு துறுன்னு ஓடிகிட்டே இருப்பாங்க. இந்த குழந்தைகள கொஞ்ச நேரம் அமைதியா உக்காரவைக்க இப்ப நாங்க விளையாடற விளையாட்டு தான் "statue ".

 statue  சொன்னா அப்படியே சிலை மாதிரி  ஆடாம அசையாம நிக்கணும், "ரிலீஸ் " சொன்னதுக்கு அப்புறமாதான் அசையணும். முதன்முதலா statue  ன்னு தேஜாகிட்ட சொல்லி, அவளால ஆடாம அசையாம 2  செகண்ட் கூட இருக்க முடியல. சிரிச்சுடுவா, இல்ல கண்கள மட்டுமாவாது உருட்டிட்டு இருப்பா. ஆனா, அதுவே பழக பழக இப்ப 1 நிமிடம் வரை இருக்க முடியுது. இந்த விளையாட்டு மூலமா, அந்த ஒரு நிமிடத்தில் அமைதியா இருக்க வைக்க முடியுது. அதோட ஆடாம அசையாம இருக்கனும்ன்னு மனதை ஒருமுகப் படவைக்குது.அத விட நாம இந்த விளையாட்ட  ஆரம்பிச்சா போதும் மாத்தி மாத்தி STATUE  சொல்லி நம்மள நம்ம வேலை செய்ய விட்டுடறாங்க .....
      
    அதே  சமயம், நாமளும் அவங்க statue சொல்ற போது, சிலை மாதிரி நிக்கனுமே, அதுலதான் சிக்கலே, முக்கியமான ஏதாவது வேலையா இருக்கும் போது statue சொல்லிடுவா. அதிலும் குறிப்பா, சாப்பாடு எடுத்துட்டு வரும் போது statue  சொல்லிட்டு ஓடிடுவா. அவ ரிலீஸ் சொல்றவரை அப்படியே நிக்க வேண்டியதுதான். ஒருமுறை, அப்படிதான், அவபாட்டுக்கு statue  சொல்லிட்டு என் முகம் முழுதும் பொட்டால கோலம் போட்டு அவ கிளிப் எல்லாத்தையும் என் மேல குத்திவிட்டு, என்னை அலங்கார (அலங்கோல) படுத்திட்டா. நல்ல வேளை, அந்த சமயத்துல யாரும் வீட்டுக்கு வரல,

சமீபத்தில் My pals &  Me ல 4 புத்தகங்கள் வாங்கி  இருக்கிறோம். மொத்தம் 6 புத்தகங்கள் கொண்ட series இது. ஓவ்வொரு புத்தகத்திலும் 2 கதைகள்.கூடவே ஒவ்வொரு கதைக்கு பின்னும் சில கேள்விகள் இருக்கு . அதற்க்கான் பதில்களும் கடைசியில் இருக்கு. நாங்கள் இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை, புத்தகங்களின் பட்டியல் இதோ:

1A) BRAVE LITTLE KITTY & HELPFUL KITTY
1B) CLEVER TUKTUK & THE NAUGHTY RATS
2A) CLEVER TOTO & SMART TOTO
2B) BRUNO LEARNS TO TAKE TURNS & BRUNO LEARNS TO SHARE
3A) LAZY SAMMY & SMART SAAMY
3B) MISHKA SAVES TREES & COPYCAT MISHKA
ஒவ்வொன்றும் ரூ. 75 /- .


Sunday, October 17, 2010

கூட்டலும், கழித்தலும்



தேஜாவுடன் நான் அதிகம் செலவழிக்கும் நேரம் என்றால் அது அவளுக்கு சாப்பாடு ஊட்டும் நேரம் தான். சில சமயம் கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு "போதும், போதும்" என்று சொல்லுவதுண்டு. அந்த சமயத்தில் அவளது கவனத்தை திருப்ப, இன்னும் கொஞ்சம் சாப்பிட வைக்கலாமே என்று தோன்றும் போது, இன்னும் 10 வாய் (முறை) சாப்பிட்டால் போதும் என்று சொல்லி விடுவேன். இதனால, அவளும் கை விரல்கள் 10 அயும் நீட்டி ,ஒவ்வொரு வாய் சாப்பிடும் போதும் ஒரு ஒரு விரலை மடக்கி கொண்டே வருவாள். இதன் மூலம் decenting order பற்றி அறிந்து கொள்ளவும், 10 முதல் 1 வரை வேகமாகவும் சொல்ல தெரிகிறது.

அவளுக்கு எது பிடிக்குமோ அதிலிருந்தே கூட்டல் சொல்லிதர எண்ணினேன். இந்த இரண்டாவது டெர்ம்மில் count and write - வருகிறது. இதற்காக நாங்க பின்பற்றியது தான் இந்த முறை, தேஜாவுக்கு சாக்லேட் சாப்பிடுவதை காட்டிலும், டப்பாக்களில் சேர்த்துவைப்பதில், அதுவும் கலர் கலராக இருப்பதை பார்க்க பிடிக்கும். வீட்டிற்க்கு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கென்றே நிறைய வாங்கி வைத்திருப்போம். அதை வைத்தே இந்த activity செய்தோம். மொத்தமாக 10 சாக்லேட் எடுத்துகொண்டோம். எனக்கு 5 தேஜாவுக்கு 5 . நான் எவ்வளவு சாக்லேட் கொடுகிறேனோ அதே அளவுக்கு அவளும் தர வேண்டும். இரண்டும் சேர்த்து எவ்வளவு இருக்கிறதென்று கூட்டி அவள் சொல்லவேண்டும். அதோடு எங்கள் கைகளில் மீதியுள்ள சாக்லேட்களின் எண்ணிகையை கூட்டி, கை விரல்கள் 10 இல் இருந்து கழித்து சொல்ல வேண்டும். மீதமுள்ள சாக்லேட் 4 என்றால், 10 விரலில் 4 ஐ மடித்து 6 என்றும் சொல்லவேண்டும். சரியாகவே செய்தாள்.. இந்த கலர் புல் விளையாட்டு மூலம் , அவள் ஓரளவிற்கு கூட்டல், கழித்தல் பற்றி புரிந்தது போல இருந்தது. இந்த முறையில் கூட்டுத்தொகை 10    வரை மட்டுமே விளையாடினோம். மீண்டுன் ஒரு முறை விளையாடும் போது கூட்டு தொகையின் எண்ணிக்கையை அதிக படுத்த வேண்டும் என்றும் எண்ணி உள்ளேன்.

இது போல குழந்தை தனமாக எங்கள் activities இருப்பதாலேயே, எங்களது activities பற்றி வலைபக்கத்தில் எழுதுவதில்லை. தீக்ஷு வின் ப்ளாக் படித்ததற்கு பிறகே இதையும் கூட எழுதலாம் என்று எண்ணி எழுதி உள்ளேன்.


இதை தீக்ஷுவின் தளத்தோடு இணைத்துள்ளேன். தீக்ஷுவின் அம்மா , தீக்க்ஷுக்காக நிறைய activities செய்து வருகிறார். மிக உபயோகமான தளம்.  நிச்சயம் http://dheekshu.blogspot.com/ சென்று பார்க்கவும்.

Thursday, August 12, 2010

வேண்டாம் வளர்ச்சி

தென்னிந்தியாவின் மான்செஸ்டர்ன்னு  சொல்ல படற   எங்க கோவையில 80 -90 களில் மில் தொழிலாளர்களும், சிறிய அளவிலாவது வொர்க் shop  வைத்திருந்தவர்களும் , ஒரு வீதியில் ஓரிரண்டு வீடுகளிலாவது தறி வைத்து சொந்த தொழில் செய்தவர்களும்  ஏராளம். பெண்களும் வீட்டிலிருந்த படியே ராட்டினம் சுற்றும் வேலையையும் செய்துகொண்டிருந்தனர்.

மில் தொழிலாளிக்கு பெண் கொடுக்க நான் நீ என்று போட்டி போட்டுகொண்டு வருவார்களாம். தீபாவளி சமயத்தில் அவர்களுக்கு கிடைக்கும் போனஸ் தொகையை பார்த்து அரசு ஊழியர்களே வியந்து பார்ப்பார்களாம். அதோடு, ஒவ்வொரு மில்லிற்க்கும்  ஒரு சங்கு (Horn ) சத்தம் உண்டு. அந்த சத்தத்தை வைத்தே பெரியவர்கள் நேரத்தை சரியாக சொல்லவதையும் , இந்த மில்லுல இருந்து இந்த சத்தம் வருதுன்னு சொல்ல்றதயும் கேட்டு பல நேரங்களில் நான் ஆச்சர்யபட்டதுண்டு. 80  களின் பிற்பாதியில் இருந்தே பல மில்களும் மூடி விட கோவைக்கு வந்தது முதல் பாதிப்பு.  நவீன  எந்திரங்கள் வரவும், ஆள்குறைப்பும், நடந்தேறி இன்று நல்ல நிலையில் ஓடி கொண்டிருக்கும் மில்களை விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்கு குறைந்து போனது.
சாலையோரங்களில் கிடக்கும் இரும்பு சுருள்கள் சொல்லும் இந்த ஏரியாவில் இருக்கும் வொர்க் ஷாப்களின் எண்ணிக்கை பற்றி. சில பெரிய நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பொருட்களின், உதிரி பாகங்கள் தயாரிக்க  பயன்படுதப்பட்ட லேத் வோர்க்ஷோப்களில், மீதியாகும் இரும்பு சுருள்களை ஏற்றி செல்லும் வண்டிகளை பார்த்தாலே தெரியும் எந்த அளவிற்கு அங்க production நடந்திருக்குன்னு. நவீன எந்திரங்கள் வரவால் சிறு தொழிலதிபர்களும் இன்று காணமல் போய் விட்டார்கள்.

"காடா" ,"மல்" துணி என்று வெள்ளையும் அல்லாமல் , சந்தன நிறமும் அல்லாமல் , தயாராகும் துணி தயாரிக்க படும் "விசை தறி" இயக்கமும் இங்கு பிரபலமாக இருந்ததுண்டு. "தடக், தடக்" ன்னு கேட்கற சத்தம் கேட்டு பழக்கியவர்களுக்கு இந்த தறி சத்தம் கேட்கலைன்னா தூக்கம் வராது,  குழந்தைகளுக்கு தொட்டில் கட்டவும், தையல் பயிற்சி கூடங்களிலும் இந்த துணிய அதிகமாகவே உபயோகித்து வந்தனர். பள்ளிகளில்  embroidary போடவும் இந்ததுணி தான் பயன்பட்டது. (1 மீ வெறும் 7 அல்லது 8 ரூபாய் தான்) சோமனூர் போன்ற புறநகர் பகுதிகளில் மட்டுமே இந்த விசைத்தறி தற்போது இயங்கி வருகிறது. இதில் வீட்டில் இருக்கும் பெண்களும் ராட்டினம் சுற்றுவதும் , இந்த நூலிலிருந்து பெரிய பெரிய கயிறுகள் தயாரிப்பதும், என்று எங்கு திரும்பினாலும் எதாவது ஒரு தொழில் நடைபெற்று கொண்டிருக்கும். காலம் மாற மாற எதையுமே பரவலாக காண முடிவதில்லை. சுய தொழில் செய்பவர்களையும் காண முடிவதில்லை.

இவ்வாறான சிறு தொழில்கள் அழிந்து எங்கும் கணினி யுகம். கணினி துறையை மேம்படுத்தும் விதமாய் "Tidal பார்க்" வருகை வேறு, கணினிதுறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தபடுகின்றது. கணினி துறை மட்டும் தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற்ற துறையா? மற்ற துறைகளை அல்லது மற்ற தொழில்களை பின் தள்ளி விட்டு ஒரு துறையை சார்ந்தவர்கள் மட்டும், ஒரு தொழில் மட்டும் முன்னேறுவது சரியா? தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ன்னு பெயர் பற்ற ஒரு நகரம் I .T  நகரமாக மாறுவது உண்மையிலேயே முன்னோக்கிய ஒரு நிலை தானோ?
"எலக்ட்ரோனிக் சிட்டி"ன்னு அழைக்க பட்ட பெங்களூர் நகரம் இன்று I .T  நகரமாக மாறிவிட்டது, அதே  நிலை தான் கோவை நகருக்கா?

இந்த கணினி துறை வளர்ச்சியால் நாம் இழந்தது எனன?

இதனால் எங்களது விளை நிலங்கள் அடுக்கு மாடி குடியிருப்பாகவும், பெரிய பெரிய தங்கும்  விடுதிகளாகவும் மாறி வருகிறது. வீடுகளில் மரங்கள் இருந்த இடங்களில் கூட மரங்களை அகற்றி ஒரு சிறிய அறையாவது கட்டி வாடகைக்கு விடும் அளவிற்கு, பணதேவைகளால்  மனங்கள் மாறிபோய் விட்டன. ஏற்கனவே தற்போது இருக்கும்  கூட்டத்தில், எங்கள் "நொய்யல் " வேறு தொலைந்து போயிற்று. பல குளங்களும் இருந்த இடம் தெரியாமல் குட்டி சுவராய், குடிசைகளாக மாறிவிட்டது. இப்போது இருக்கும் நிலையில் கோவைக்கு குடிநீர் ஆதாரமாய்  இருப்பது சிறுவானியும், அத்திகடவும் தான். மக்கள் தொகை பெருக்கத்தில், புது புது கட்டிடங்களில் குடிபுகும் அனைவருக்கும் இருக்கும் தண்ணீர் பத்தாது , அதிலும் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு  நிறைய தண்ணீர் செல்லும் போது, கிராமப்புறங்களில், கொஞ்சம் ஒதுக்கு புறங்களில் இருப்பவர்கள் தண்ணீருக்கு எங்கு செல்வார்கள்?  60 , 70 அடிகளிலேயே தண்ணிர் கிடைத்த இடங்களில் கூட தற்போது 500 அடிக்கும் மேல் தான் தண்ணீர் தென்படுகிறது. கோவையின் நீர் ஆதாரத்தை உயர்த்த இதுவரி எந்த திட்டமும் இல்லை. கேரள மாநிலத்துடன் சிறுவாணி அணைக்காக போட்ட 100 ஆண்டு கால ஒப்பந்தமும் நிறைவடையும் நேரத்தில், இவ்வளவு மக்களின் தண்ணீர் தேவை எப்படி பூர்த்தியாகும்?

பழையன கழிதலும், புதியன புகுதலும் ன்னு புது புது தொழில்கள் வருவதனால், பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் சரியே. ஆனால் I .T துறையினருக்கு கிடைக்கும் பல ஆயிர, லட்ச சம்பளத்திற்கு ஏற்ப விலைவாசியும் உயர்ந்து கொண்டே தான் போகும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட வருமானத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடத்த முடியுமாம்,10 ரூபாயில் கூட ஒரு நேர உணவு  கிடைக்குமாம். ஆனால் கோவையில் எல்லாமே விலை அதிகம் தான், இனி இது யாருக்கான நகரம்? சாதாரண தொழில் செய்பவர்களால் இனி பிழைக்க முடியுமா?

"பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்" -    உயரத்தான் முடியுமா?

தெரியாதவர்களாக இருந்தாலும் "வா கண்ணு சாப்பிட்டு போகலாம்" ன்னு அன்பா சொல்லிட்டு இருந்த மக்கள் பிழைக்க கஷ்டப்படும்  சமயத்துல, வேறு மாநிலமக்கள் வந்து இங்கு பிழைப்பதை ஏற்று கொள்ளத்தான் வேண்டுமோ? எங்க ஊரு மக்கள்  வாழ்க்கை நடத்த முடியாமல், எங்க மண்ணுக்கான அடையாளம் காணாம போக செய்யற இந்த வளர்ச்சி வேண்டாம்................

Friday, July 16, 2010

குட்டீஸ்

கதைகளை கேட்பதோடு மட்டும் அல்லாமல் கதாபாத்திரமாக மாறிவிடுவது எங்கள் வீட்டில் ரொம்ப பிரபலம். அதாவது,  பாட்டி வடை சுட்ட கதையில், நான் தான் பாட்டி, நான் வடை சுட, தேஜா காக்கா போன்று வடையை திருடி சென்று விடுவாளாம். கட்டிலின் மேலே சென்று உக்கார்ந்து விடுவாள். பின்பு நானே நரியாக மாறி சரியாக டயலாக்  சொல்ல வேண்டும், அவ இஷ்ட பட்டா வடைய கீழ போடுவா, இல்லன்னா ஏமாந்த நரியாக திரும்பி வர வேண்டும்,  இது மாதிரி நாங்க படிக்கற ஒவ்வொரு கதைகளிலும் ஏமார்ந்த கதா பாத்திரம் என்னுடையது.

அந்த வரிசையில, கண்ணன் வெண்ணைய திருடி சாப்பிட்ட கதை தேஜாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கு போர் அடிச்சா, இந்த நாடகத்த தான் முதல்ல விளையாடனும்னு சொல்லுவா. போனா வாரம் ஒரு நாள்,
  "அம்மா, நீ தான் கண்ணா மம்மியாம் , நீ வெண்ணைய கடைஞ்சு மேல வை" ன்னு சொல்லிட்டே இருந்தா.
நான் ஏதோ அசதியில இருந்ததால "நான் கண்ணா மம்மி எல்லாம் இல்ல, தேஜா மம்மி தான்" ன்னு சொல்ல, ஒரு குச்சி எடுத்துட்டு வந்து "மந்திரம் சொல்ற சுதி (or
சுஜி) சொல்றேன், தேஜா அம்மாவை, கண்ணா அம்மாவா  மாத்துன்னு" சட்டுன்னு சொல்லவும், (உபயம்: சுட்டி டிவி, எனன தொடர்ல இப்படி வரும்னு தெரியல)  அதுக்கு அப்புறமா விளையாடாம இருக்க முடியுமா!

(கதைகள சொல்றத காட்டிலும், நடிச்சு காமிக்கறதால creativity  வளர  கண்டிப்பா வாய்ப்பு இருக்கு, ஒரு டயலாக் இப்படிதான் சொல்லனும்னு இல்லாம, அந்த நிமிஷத்துல அவங்களுக்கு தோன்றத சொல்லும் போதும், இந்த கதைய இப்படி மாத்திக்க்கலாமான்னு குழந்தைகளே கேட்க்கும் போதும் நமக்கு அது புரியும், (ஆனா பல சந்தர்ப்பங்கள்ல நம்ம மூக்க உடச்சுடுவாங்க, கவனமா இருக்கணும்!)

Wednesday, July 7, 2010

காதல், கல்யாணம்

காதலுக்கும், கல்யாணதிற்க்கும்  எனன வித்தியாசம்ன்னு ஒருத்தர் ஒரு முற்றும் துறந்த முனிவரிடம் கேட்டானாம்,  அந்த முனிவர் எந்த பதிலும் சொல்லாமல், ஒரு பெரிய தோட்டத்திற்கு அவரை அழைத்து சென்று "இது ஒரு ரோஜா தோட்டம், இந்த தோட்டத்துல போய் இருக்கறதுலயே பெரிய செடியா பறித்து வா, ஆனால் இரண்டு நிபந்தனை. ஒரே ஒரு செடி மட்டும் தான் பறிக்கணும், ரெண்டாவதா,  நீ போன வழியிலேயே திரும்பி வரகூடாது ன்னு சொன்னாராம். சரின்னு அவரும் போயிட்டு கொஞ்ச நேரம் கழித்து வெறும் கையோட முனிவர் கிட்ட வந்தாராம். முனிவர்  கேட்டார், "ஏனப்பா, வெறும் கையோடு  வருகிறாய்? அங்கு பெரிய செடிகளே இல்லையா?".   அதற்க்கு அவர் "நிறையவே இருந்தது, ஒரு செடிய பார்த்துட்டு, அடுத்ததா இருக்குற செடிய பார்க்கும் போது அது தான் ரொம்ப பெருசா தெரிந்தது , அப்படியே போனா அதற்க்கு அப்புறமா வர்ற செடிகள் எல்லாம் சின்னதா இருந்தது, போன வழியிலே திரும்ப வரகூடாதுன்ற நிபந்தனைனால வெறுங்கையோடு வர வேண்டியதா போச்சுன்னாராம்"

சரி பரவாயில்ல, இப்ப அடுத்ததா ஒரு சூர்யகாந்தி தோட்டத்துக்கு கூட்டிட்டு போனாராம். இதுல இருக்கறதுலயே ரொம்ப அழகான சூர்யகாந்திய பறிச்சிட்டு வா, இதற்கும் அதே நிபந்தனை தான்னு சொன்னாராம். தோட்டத்துக்குள்ள போன அவர் சட்டுன்னு சீக்கிரமா ஒரு சூர்யகாந்தி பூவோட வந்துட்டாராம். அந்த முனிவர்  "ஏனப்பா போன உடனே வந்துட்ட, இருக்கற பூவிலயே இந்த பூதான் ரொம்ப அழகா இருந்ததான்னு கேட்டாராம்"   "இல்லங்க, நான் முதல்ல பார்த்த அழகான பூ இதுதான், இத பறிச்சதுக்கு  அப்புறமா வேற ஒரு பூவும் அழகா தெரிஞ்சது, ஆனா போன தடவை மாதிரி ஏமாற கூடாதுன்னு, இதையே பறிச்சுட்டு வந்துட்டேன்னு சொன்னாராம்"


முனிவர் சிரிச்சுட்டே இது தான் காதலுக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்ன்னு சொன்னாராம்.


Sunday, June 13, 2010

" சாதிகள் இல்லையடி பாப்பா "

" சாதிகள் இல்லையடி பாப்பா "

இப்படி பாரதியார் அந்த காலத்துலயே சாதிகள் ஒழிக்க்கப்படனும்னு நினச்சு  தான் பாடினார். ஆனா 21 ம் நூற்றாண்டில, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஜாதி அவசியம்னு விவாதம் நடந்துட்டு இருக்கு.

அந்த காலத்துல அவரவர் செய்யும் தொழில்களின் அடிப்படையில ஜாதிகள் உருவாகி இருக்கலாம். உயர்ந்தவன், தாழ்ந்தவன்ற பாகுபாடெல்லாம் இருந்தது.  ஆனா, சில கிராமங்கள் தவிர்த்து இப்ப அந்த நிலைமை எல்லாம் மாறிடிச்சு. தாழ்ந்த குலம்ன்னு  சொல்லப்பட்ட பலரும், தற்போது நல்லா படிச்சு, நல்ல நிலமையில இருக்காங்க. இதுல கலப்பு திருமணம் செஞ்சவங்களும் இருக்காங்க.  கலப்பு திருமணம் செய்யறவங்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்துட்டே  தான் போகுது.  இந்த நிலமையில, ஜாதி வாரியான கணக்கெடுப்புன்னா, ஓர் ஆணோட சாதிய ஒரு குடும்பம் முழுமைக்கும்னு எடுப்பாங்களா? இல்ல ஒரே குடும்பத்தில் இருந்தாலும்  கணவன், மனைவின்னு ரெண்டு பேரோட ஜாதியையும் கணக்கில் எடுத்துக்குவாங்களா?

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா ஒரு ஒரு ஜாதியை (அ) வகுப்பை சார்ந்தவர்கள் இவ்வளவு அப்படிங்கற விபரம் அறியப்படுமோ? அப்படி இருக்கும் பட்சத்தில் , சிறுபான்மை மக்கள் நாங்கள்னும், பெரும்பான்மை சமூகம் எங்களுடயதுன்னும் ஒரு பாகுபாடு வந்தால் இதுவே பல பிரிவினைகளுக்கும் வழிவகுக்குமே!

சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தினால் தான் பின் தங்கிய வகுப்பை சார்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கறாங்கன்னு தெரியும்னு லாலு பிரசாத் சொல்லியிருக்கார், இதுல நலத்திட்டங்கள் போய் சேருதோ இல்லையோ, அடுத்த "election " ல இன்னும் பல சாதி கட்சிகள் வரை வாய்ப்பு இருக்கு.

எவ்வளவு தான் படித்தவர்களாய் இருந்தாலும், இன்னமும் சாதியை பற்றிய பேச்சுக்கள் நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது. (இது யாரையும் புண் படுத்தும் எண்ணத்துடன் எழுதப்பட்டது இல்லை)

சென்ற வாரம் எங்கள் அலுவலகம் வாயிலாக ஒரு கருத்தாய்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தோம், அதன் பின், அந்த நிகழ்ச்சியில் வந்திருந்தவர்களில் இவர் என் வகுப்பை சார்ந்தவர், இவர் என் உறவினர் என்று என் நண்பர் கூறியதை கேட்கும் போது, உண்மையிலேயே மனவருத்தமாக இருந்தது, அவர் அதை ஒரு பெரிய விசயமாக எடுத்து சொல்லவில்லை என்பதை நான் அறிந்த போதிலும், நம் மனதில்,  நம் இனம், நம் குலம் என்ற பாகுபாடு நன்றாகவே விதைக்க பட்டு இருப்பதை உணர்ந்தேன்.

பொதுவாக ஒரு பொருள் தனக்கு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே, அந்த பொருளை பற்றிய தாழ்ந்த கருத்துக்கள் வெளிப்படும். அதுபோல, இந்த விஷயத்தை பற்றி பேசுவதால் என்னை தாழ்ந்த குலமென்று எண்ணி விட வேண்டாம்.     என்னை உயர்ந்த குலமென்று நினைக்க வேண்டும் என்பதற்காகவும் இதை சொல்லவில்லை.

இதிலும் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சில நூறுகள் செலவு செய்து சான்றிதல் வாங்கிய பலரையும் நான் அறிவேன். ஏன் எங்கள் வீட்டில் கூட, என் மூத்த சகோதரர் (FC ) , இந்த காரணத்தினாலேயே கல்லூரியில் இடம் கிடைக்க சற்று சிரமமாக இருந்தது,  பின் அவரது முயற்சியால் சான்றிதல் கிடக்க பெற்ற நானும் என் இளைய சகோதரரும் பின் தங்கிய வகுப்பை சார்ந்தவர்கள். தற்போது, ஒவ்வொருவரும் வேலை நிமித்தமாக ஒவ்வொரு இடங்களில் இருக்கிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி , ஜாதியை சொல்வதானால் உண்மையான ஜாதியை சொல்வதா? இல்லை சான்றிதழில் இருக்கும் ஜாதியை சொல்வதா?

"சாதிகள் இல்லையடி பாப்பா" ன்னு எங்க சாதிய சேர்ந்த ஒருத்தர் சொல்லியிருக்கார்ன்னு விளையாட்டாக சொல்வார் என் நண்பர். எது எப்படியோ ,எந்த ஒரு விசயமுமே அழிவுக்கு வழிகாட்டாமல், ஆக்கத்திற்காக இருந்தால் சரிதான். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின், இந்தியாவின் No .1   சாதி (மக்கள் தொகையில்)   எங்களுடயதுன்னு ஒரு கூட்டம் வராமல் இருந்தால் சந்தோசமே ....

Wednesday, May 26, 2010

ஸ்கூல்-2 தொடர்ச்சி

அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது என்பதை இந்த ஆண்டு 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் நன்றாகவே தெரிய வந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், இல்லை தனியார் பள்ளிகளை ஓரம் கட்டும் வகையில் அரசு பள்ளி மாணவி சாதித்து இருப்பது பெருமைக்குரிய விஷயம். அந்த மாணவியும் தமிழ் வழிகல்வி படித்தவரே. இந்த மாணவியின் சாதனையை தொடர்ந்து அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பவர்கள் எண்ணிக்கை இனி உயரலாம். ஆனால் ஆங்கில வழி கல்வி முறையில் உள்ள அரசு பள்ளிகள் மிக குறைந்த அளவே உள்ளது. அதுவும் 6  ம் வகுப்புக்கு மேல் தான்.    (ஆங்கில வழி கல்வியை நான் என்றும் ஆதரிப்பது இல்லை)

"traveller " அவர்கள் என்னிடம் பேசும் போது, நீங்களும் ஏன் உங்கள் குழந்தையை அரசு பள்ளிகளில் விடக்கூடாது என்று கேட்டார்?    விடலாமே . கிட்டத்தட்ட நான் படித்ததும் அப்போதைய அரசு பள்ளிகளின் தரத்தை விட கொஞ்சம் அதிகமாக உள்ள பள்ளியில்தான்.

ஆங்கில வழியில் பயின்றவர்களை  விட தமிழ் வழியில் பயின்றவர்கள் தமிழையும், ஏன் ஆங்கிலத்தயும் கூட தவறில்லாமல் எழுதுவார்கள்  என்பதில் கொஞ்சம் கூட மாற்று கருத்து இல்லை, அதாவது ஒரு சில வார்த்தைகளில் "a " யும்  "e " யும் வருவது குழப்பத்தை தரும்,  ஆனால் தமிழ் வழி கற்றவர்கள் "எந்த இடத்தில "a " எந்த இடத்தில "e " என்பதை மிக சரியாகவே உபயோகிக்கலாம் , இன்னும் சொல்ல போனால் "center " என்ற இந்த வார்த்தைக்கும் "centre " என்ற இந்த வார்த்தைக்கும் கூட ஆங்கில மீடியத்தில் படித்தவர்களை காட்டிலும் தமிழ் வழி கற்றவர்களினால் சரியாக பிரித்து அறிய முடியும் .  அதோடு, எங்கும் கணினி மயமாகி போன இந்த கால கட்டத்தில் கண்ணினியில் திடீரென்று வரும் box ஐ படித்து புரியாமல் எல்லாவற்றுக்கும் "ஓகே" கொடுக்காமல் , சரியான தெரிவை செலக்ட் வேண்டுமானால் செய்யலாம் .

என் மகள்  தேஜாவை தமிழ் வழிக்கல்வியில் சேர்த்துவதில்  எனக்கு ஒன்றும் ஆட்சேபணை      இல்லை.   ஆனால் , வாழ்க்கைக்கு தேவையான சில விஷயங்கள் அவளுக்கு தெரியாம போயிட்டா (!).     பலரும் இருக்கும் இடத்தில சத்தமாக பேசி சிரித்து, மற்றவர்கள்  கவனத்தை திசை திருப்ப தெரியாமல் போகுமோ,  காக்கா பிடிக்க, ஐஸ் வைக்க தெரியாமல் போகுமோ,     எவ்வளவு தான் knowledge  இருந்தாலும் நுனி நாக்கு ஆங்கியம் பேசுபவர்களை கண்டால் அலர்ஜி ஆகி "YES ", "NO " , "THANK U" வை தவிர வேற எதுவும் பேச முடியாமல் , தன்னம்பிக்கை "ஓட"  தனிமை படுத்தபடுவாளோ !.     இப்ப தேஜாவ ஓரளவு பிரபலமான அந்த மூன்றெழுத்து பள்ளியில சேர்த்த போதிலும்,  ஏன் நீங்க இந்த பள்ளியிலையில சேர்த்தியிருக்க கூடாதுன்னு சிலர் கேட்கிற சமயத்துல , ஒரு சமயம் govt ஸ்கூல்ல சேர்த்ததுக்கு அப்புறமா ,    "அட govt ஸ்கூல்லா ன்னு கேவலமா  கேட்டுட்டா , பாவம் தேஜா எனன ஆவாளோ?      Govt  ஸ்கூல்ல படிக்கறவங்க கிட்டத்தட்ட நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவங்களா தான் இருப்பாங்க, அப்படிப்பட்ட சூழ்நிலையில சமூகத்துல மேல் தட்டு வர்க்கத்தை போல அதிகாரத்தோட நடக்க தெரியாம போயிட்டா?    அத விட அவளுக்கு பிற்காலத்துல யார்கிட்டயாவது எதுக்க்காகவாவது கோபம் வந்து ஆங்கிலத்துல "shit " ன்னு ஒரு வார்த்தைய உபயோக படுத்த தெரியாம "உனக்கு ஒரு ம------ம் தெரியலன்னு தப்பான வார்த்தைய உபயோக படுத்தி , அவளுக்கு கெட்ட பெயர் வந்துட்டா?     இப்படி இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம் .  

 வேற சோப்பு போட்டு குளித்தாலே தன் பெண்ணிற்கு தன்னம்பிக்கை போயிடும்னு கவலைபடற அம்மாக்கள் இருக்கற இந்த கால கட்டத்தில நான் எப்படி இதை எல்லாம் எதிர் கொள்வது?

அதோட தனியார் பள்ளிகளுக்கு தான் "exposure " நிறைய இருக்கு,   உதாரணத்துக்கு சொல்லனும்னா ஸ்கூல் activities ன்னு   வந்தா, ஊர்லயே பிரபலமாக இருக்கற பள்ளிகளதான தேர்ந்து எடுக்கறாங்க , (யாரையும் தப்புன்னு சொல்லிட முடியாது,) Govt ஸ்கூல்ல   இருக்கறவங்களுக்கு பல விஷயங்கள், பல போட்டிகள் நடக்கறது தெரியாமலே போயிடுது. (அறிவியல் கண்காட்சி உட்பட).    ஆனா தனியார் ஆங்கில பள்ளிகளில் , நம்ம கிட்டயே காச வாங்கி , அவங்க ஸ்கூல் பஸ்லயே கூட்டிட்டு போயிடறாங்க ,   ஓஓ! ஊர்ல இப்படி எல்லாம் நடக்குதான்னு Govt ஸ்கூல் குழந்தைகள் ஆச்சர்யபட்டு கொஞ்சம் ஒதுங்கிதான் போவாங்க ,

ஏன், அரசு பள்ளிகள்ல படிச்சு அப்துல்கலாம் அய்யா, அண்ணாதுரை போன்றவர்கள் முன்னேரலயானு   கேட்கலாம்,  சரி அவங்கள முன் உதாரணமா எடுத்துட்டு , நாளைக்கே அவள govt ஸ்கூல்ல  சேர்த்து விட்டுட்டு ஒரு சமயம் அவ govt ஸ்கூல்லயே  படிச்சு பெரிய ஆளா வந்துட்டா பரவாயில்ல,   எதோ ஒரு காரணத்துனால அது "reverse " ஆயிட்டா?  நீங்க தான் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருகீங்க,  என்னையும் ஏன் கஷ்ட்ட படுத்தறீங்க? ன்னு கேட்டா எனன நான் சொல்லுவேன்?

ஆங்கில வழி கல்வி கற்றால் மட்டும் பிற்காலத்துல கஷ்ட படமாட்டாளான்னு கேட்டா , பணம் புழங்குகிற பள்ளியில கொஞ்சம் நல்ல " status " ல   அவ வளர்றதால பிழைக்க அதாவது சம்பாரிக்க  தெரிஞ்சுக்குவா, 

"சமூக அக்கறையோடு பிழைக்க தெரியாத நல்ல மனிதனாய் இருப்பதை காட்டிலும் , எந்த வித சூழ்நிலையும் கையாள கூடிய சாமர்த்தியம் உள்ளவளாய் வளர்ந்தால் போதும்."

அதை ஆங்கில வழி கல்வி தரும் என்று நம்புகிறேன். "நம்பிக்கை தானே வாழ்க்கை"

Tuesday, May 18, 2010

ஸ்கூல்- 2

ஸ்கூல்

summer vacation  முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 10 , 15 நாட்களே உள்ள நிலையில், இன்னும் கல்வி கட்டணம் அறிவிக்க படாமல் இழுபறி நிலையே நீடிக்கிறது. அரசு அறிவித்துள்ள கட்டணத்தை ஏற்காத தனியார் பள்ளிகளில் சில , பள்ளியை மூடுவதாகவும் , இன்னும் சில பள்ளிகள் வழக்கம் போல செயல்படும், ஆனால் கல்வி கட்டணம் மட்டும் தற்போதைக்கு வசூலிப்பது இல்லை எனவும் அறிவித்துள்ளது இன்னும் சில பள்ளிகளில் வசூல் வேட்டையும் முடிவடைந்தது . இந்த நிலையில் அரசு அறிவித்த கட்டணத்தை கட்டாயம் ஏற்க வேண்டும் எனும் பட்சத்தில்  அதிகப்படியான கட்டணத்தை மீண்டும் மாணவர்களிடம் ஒப்படைக்குமா பள்ளி நிர்வாகம்?

இதனை நாட்களாக ஏகத்துக்கும் , pre -kg க்கு கூட குறைந்த பட்சம் Rs . 15000 / - வசூலித்து பழகியவர்களிடம் , 3 இல் ஒரு பங்கு கட்டணத்தை வசூலிக்க சொன்னால் இதை எப்படி ஏற்பார்கள். இதில் ஆசிரியர்களுக்கு தான் முதல் இழப்பு, இந்த வருடம் அவர்களின் ஊதியம் உயராது , இதனால் சில ஆசிரியர்கள் தவிர்த்து , பல ஆசிரியர்களும் தங்கள் ஊதியத்தை உயர்த்தி கொள்ள tuition  நடத்தியே தீர்வார்கள். இதை தனியார் பள்ளிகளும் கண்டும் காணாமலும் விட்டு விடுவார்கள். இதனால் மனரீதியாக பாதிக்க படுபவர்கள் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் தான் ,

இதனை நாட்களும் கல்வி வியாபாரம் ஆக்கபடுவதை அரசு கண்டும் காணாமலும் விட்டு விட்டது ஏனோ ? எப்ப கல்வித்துறை தனியார் வசம் விடப்பதோ , அன்றிலிருந்து அவர்களின் நடவடிக்கைகளை கவனித்து இருக்க வேண்டும் , ஆனாலும் இந்த நிலையை இன்னும் வளர விடாமல், இப்பவாவது கல்விபுரட்சி , கல்வி கட்டண புரட்சி ஏற்ப்பட்டது நலமே .

கல்வியை சேவையாக நினைத்து பணிபுரிய எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் திரு.கல்யாணி அவர்களை போல ஒரு சிலரை பார்க்க முடிகிறது , மற்றபடி கல்வித்துறை நல்லா லாபம் அளிக்க கூடிய ஒரு தொழிலாகவே இருக்கிறது, பல புதிய வரவுகளான இன்டர்நேஷனல் pre -schools வெப்சைட் ல கூட franchisee option ஐ படித்தால் தெரியும், ஒரு pre -ஸ்கூல் ஆரம்பிக்க 5 முதல் 10 லட்சங்கள் வரை தேவை படும் . இதை ஒரே வருடத்தில் நீங்கள் பெற்றிடலாம் என்று இருக்கிறதை பார்க்கும் போது இது ஒரு நல்லா businees தானே.

இங்கு எங்கள் கோவையில் , foundries  வைத்திருந்த பல தொழில் அதிபர்களும் தற்போது இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இன்டர்நேஷனல் பள்ளிகளுக்கும் இந்த  கட்டண விகிதம் பொருந்துமா என்பதும்  தெரியவில்லை. உலகமயமாக்களில் corporate கலாச்சாரத்தில் கோவையில்  மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 க்கும் மேற்பட்ட இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் வந்துவிட்டது. பல ஆயிரங்கள் வசூலிக்கபடும்  இந்த பள்ளிகள் எல்லாம் பெயர் அளவிற்கு தான் இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் , பாடத்திட்டம் என்னவோ C B S E தான் ,  இதற்கும் அங்கீகாரம் கொடுத்து வளர்த்து வருகிறோம் ,

ஒரு புறம் சமச்சீர் கல்வி, பற்றிய சர்ச்சை நடந்து கொண்டிருக்க மாறுபட்ட இந்த கல்வி திட்டத்துக்கு என்று வரும் விடிவு காலம்?  இதற்க்கு தீர்வு தான் எனன???????????

Tuesday, May 11, 2010

சமையல்

ரொம்ப நாட்களாக receipe  எதாவது போடலாம்னு ஆசை . சரி தேஜாவுக்கு பிடிச்ச பன்னிர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 50  கிராம்
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250  கிராம்
முந்திரி - 50 கிராம்
கசகசா - 10 கிராம்
தயிர் - 50 கிராம்
டால்டா - 50 கிராம்
ஏலக்காய் - 4
பட்டை ,கிராம்பு - சிறிதளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - தேவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகதூள் - சிறிதளவு
மல்லித்தூள் - 1 /2  டீஸ்பூன்
பன்னிர் - 500 கிராம்
வெண்ணை - 5 கிராம்
உப்பு - தேவைக்கு ஏற்ப



முதல்ல வாணலியில எண்ணெய் சூடானதும் வெங்காயத போட்டு நல்லா வதக்கி நைசா அரச்சுக்கணும். தக்காளிய தனியா வேக வெச்சு  அரைத்து வைக்கணும் . முந்தியையும், கசகசாவையும் தண்ணீரில் ஊற வெச்சு தயிர் சேர்த்து அரைக்கணும் .

இப்போ ஒரு வாணலியில டால்டா, கொஞ்சம் எண்ணெய் ஊத்தி ஏலக்காய், கிராம்பு , பட்டை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கணும், அடுத்ததா வேக வெச்சு அரச்ச தக்காளி போட்டு வதக்கிட்டு , அரச்ச  வெங்காயத்த   சேர்க்கணும் . கொஞ்சமா வதக்கினதுக்கு அப்புறமா மஞ்சத்தூள் , மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து வாடை போறவரை கிளறனும் . அப்புறமா அரச்சு வெச்சு இருக்கற முந்திரி, உப்பு , பன்னிர் சேர்த்து (பன்னிர எண்ணையில வறுத்து எடுத்துட்டா நல்லா இருக்கும்)  வெண்ணை ஊற்றி ஒரு கொதிக்க  விடவும்,  ம்ம்ம் ....... வாசம் வருதா .........
சப்பாத்தியோட தொட்டு சாப்பிட அருமையான டிஷ் .

Sunday, May 9, 2010

குட்டீஸ்

பள்ளிக்கூடம் ஆரம்பித்து 10 நாட்களுக்கு மேலாக ஆனாலும் ரஞ்சித்க்கு இன்னும் இந்த பள்ளி பொருந்தவில்லை.  தேஜா "A " section , ரஞ்சித் "B " இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சென்ற வாரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களும் ரஞ்சித்தை யாரோ அடித்துவிட்டார்களாம். வீட்டில் வந்து கம்ப்ளைன்ட். என்னவென்று விசாரிப்பதற்காக என் அம்மா சென்றிருந்தார், கூடவே தேஜாவும்(!).    ரஞ்சித்தின் பக்கத்தில் இருந்த பையனிடம் "உன் பெயர் எனன?" என்று மட்டும் தான் கேட்டிருக்கிறார்,  அந்த பையன் பதில் சொல்வதற்குள் "எங்க ரஞ்சித நீ அடிச்சயா, இனிமேல் அடிக்காத , என்ன "  என்று சொர்ணாக்கா ரேஞ்சுக்கு மிரட்டி இருக்கிறாளாம் தேஜா. நல்லவேளையாக அந்த பையன் அழவில்லை ,  "வீட்ல புலி, வெளியில எலி" யாய் இருந்தவள்,  திடீர்ன்னு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்ததுன்னு தெரியல....
---------------------------------------------------------------------------------------------
பள்ளிக்கூடம் இருக்கும் நாட்களில் காலையில் 7 மணிக்கே குளித்து தேஜா ரெடி ஆயிடுவா. சனிக்கிழமை விடுமுறை ஆனதால் மெதுவாதான் எழுந்தாள்.  எழுந்ததும் டிவி பார்த்துட்டே இருந்தாள் (ரஞ்சித்தும் தான்). நமக்கும் ஒரு வேளை முடிஞ்சா மாதிரி இருக்குமேன்னு,
"தேஜா, வா குளிக்கலாம்" - நான்
"dailyum  தான் நேரத்துல குளிக்கறேன்ல, இன்னைக்கு அப்புறமா குளிச்சுக்கறேன்" - தேஜா சொல்லவும்,  
நமக்கும் ஒரு வேலை முடிஞ்ச மாதிரி இருக்குமேன்னு, நானும் கொஞ்சம் குரலை உயர்த்தி
"உன் இஷ்டதுக்கு என்னால குளிக்க வைக்க  முடியாது, வா வந்து குளி "
கொஞ்ச நேரம் அமைதியா  இருந்தா,  ரஞ்சத் கிட்ட எதோ சொன்னா, அந்த சமயத்துல எங்க அம்மா வந்து "விடு அப்புறமா நானே குளிக்க வைச்சுக்கிறேன், மழை தூரலா இருக்குல"ன்னு சொல்லவும், சரின்னு நான் குளிக்க போயிட்டேன்,

அப்ப ரஞ்சித் சொன்னான் " தேஜாக்கா, என்னை பார்த்து  உங்க அம்மா பயந்து போய் பாத்ரூம்ல ஒளிஞ்சுக்கிட்டங்க,  வா நாம டிவி பார்க்கலாம்," - டொயிங்(!) 
(இப்படி அடிக்கடி பல்பு வாங்கறதே வேலையா போச்சு)
-------------------------------------------------------------------------------------------------------

சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு தண்ணீரை கொதிக்க வைத்து ஆற விடுவதற்காக கட்டிலுக்கு  அடியில் வைத்திருந்தேன். தேஜாவும் , ரஞ்சித்தும் விளையாடிட்டு இருந்தவர்கள், கட்டிலுக்கு அடியில் இருந்த தண்ணீரை ரஞ்சித் கொட்டி விட,  நல்ல வேலையாக யார்மேலயும் படாமல் கீழ கொட்டிடுச்சு. ஆனாலும் பதட்டத்துடன் " இவ்வளவு இடம் இருக்க கட்டிலுக்கு அடியில இருந்த தண்ணிய கொட்டிடியே , சுடு தண்ணி கால்ல பட்டா எனன ஆகி இருக்கும்ன்னு" -  சத்தம் போட சார் அழுகையுடன் கோபமாக வெளிநடப்பு செய்து விட்டார் .

தேஜாவுக்கு வந்ததே கோபம் " நீ ஏன் என் friend - எ திட்டினே , பார் அவன் அழுதுட்டே போறான் பார், தண்ணிய நீ ஏன் கீழ வெச்ச??? " - :((((
வாஸ்தவமான பேச்சு தான ன்னு நான் யோசிக்கும் போதே வந்தார் சார் (ரஞ்சித்)

" நீங்க ஏன் அக்காவோட frienda  திட்டினீங்க . அக்கா அழறா பாருங்க " (ங்கே )

"யாருடா அக்கா friend "?? -

"நான் தான் (!) "-         - ரஞ்சித் சொல்ல டொயிங்!

- -எப்படி  எல்லாம் யோசிக்கறாங்கப்பா !
----------------------------------------------------------------------------------

சென்ற வாரம் கொடைக்காணல் செல்வதற்கு முன்பாக என் நாத்தனாரின் வீட்டிற்கு சென்றிருந்தோம்,  அங்கு பக்கத்தில் இருந்த கிரௌண்ட் -இல்  குழந்தைகளுக்கு ஓட்ட பந்தயம் வைத்து விளையாடி கொண்டிருந்தோம். அப்போது ஒரு 8 வயது பெண் எங்கள் அருகில் வந்து நின்றாள். நானும் விளையாட்டு மும்மரத்தில் சரியாக கவனிக்க வில்லை .  தேஜா அந்த பெண்ணிடம் எதோ பேசி கொண்டிருப்பது தெரிய என் கவனம் தேஜா மீது சென்றது ,

"நீயும் எங்க கூட விளையாட வறியக்கா"

"ஆமாம்" -
"உங்க வீட்ல அம்மா தேட மாட்டாங்களா"
"இல்ல தேட மாட்டங்க"
சரி இருன்னு சொல்லிட்டே "அம்மா இந்த அக்காவையும் நாம விளையாட்டுல சேத்திக்கலாமா"  - தேஜா கேட்கவும்
சரி ன்னு சொன்ன நான் என்னை நினைச்சு நானே ஒரு நிமிஷம் வெட்க பட்டேன் . அதே  சமயம் பெருந்தன்மையா  யோசிக்கறாலேன்னு பெருமையா இருந்தது .
அப்ப என் நாத்தனாரின் பெண் "இது ஒரு குட்டி அபி" ன்னு  (அபியும் நானும் படத்துல வர மாதிரின்னு)  சொல்ல எனக்கு ரொம்பவுமே சந்தோசமா இருந்தது ,

"அடுத்தவர் உணர்வுகள் நீ புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டாய் ,
கண்ணே!  நீ வளருகிறாய் என்பதை ஒவ்வொரு தருணத்திலும் வெளிகாட்டுகிறாய்"

Friday, April 23, 2010

காலையில் எழுந்த கோபம்

இன்று காலை 6  மணிக்கு கரண்ட் கட் . இந்த விஷயம் என் கோபத்திற்கு காரணம் அல்ல . இது நமக்கு பழகிப்போன ஒன்று தானே ... வெளிச்சமும், காற்றும் பற்றாகுறை காரணமாக ஜன்னல், கதவுகளை திறந்த போது கேட்ட உரையா(சா)டல் என்னை கோபத்தில் ஆழ்த்தியது.

எங்கள் வீட்டிற்கு பின்புறம் இருப்பவர்கள் காலையிலேயே வாசலில் அமர்ந்து கொண்டு அந்த வீட்டு மருமகளை பற்றிய பல குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே போனார்கள். அந்த மகனும் சேர்ந்து கொண்டுதான்.

அந்த பெண்ணிற்கு (மருமகளுக்கு) குழந்தை பிறந்து (சிசேரியன்)  இன்றோடு 5 நாட்கள் ஆகிறது. இன்னும் மருத்துவமனையில் தான் இருக்கிறார்கள் . இன்னும் இரெண்டொரு வீட்டுக்கு வந்துவிடுவார்களாம்.  அந்த பெண்ணின் அம்மா வீடு 2  தெரு தள்ளி தான் உள்ளது,  அம்மா வீடு பக்கத்தில் இருந்தாலும் சென்ற வாரம் வரை அந்த பெண் வேலைக்கும் சென்று வந்து , கணவன் வீட்டில் தான் இருந்தாள் ,  இப்ப பிரச்சனை என்னன்னா , குழந்தையை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணை நேராக கணவன் வீட்டுக்கு தான் வரவேண்டுமாம் . அங்கு தான் குழந்தை வளர வேண்டுமாம் . அவளது வீட்டுக்கு எடுத்து செல்ல கூடாதாம் ,  கொஞ்ச நாள் தன அம்மா வீட்டில் தங்க விரும்புவதாக  அந்த பெண் தன கணவனிடம் சொல்லி இருக்கிறாள் போலும் . (எனக்கு தெரிந்து அந்த பெண் அதிர்ந்தும் கூட பேசமாட்டாள்) . இந்த விஷயத்தை தன அம்மாவிடம் சொல்லிகொண்டிருக்கிறான் அந்த பையன்
"அவ நேரா இங்க வராட்டி அவள diverse  பண்ணிவிடுவேன் , அப்படி எனன அம்மா வீடு கேட்க்குது , என் குழந்தையை நானே வளர்த்து கொள்வேன் , அவ ஒன்னும் தேவை இல்ல...................... " - இப்படி ஆணாதிக்கதோட பேசிட்டு இருந்தான் .

"diverse "  இந்த வார்த்தை எனன ஆண்களின் ஆயுதமா ? இதை சொல்லி பயமுறுத்த?
 பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண் என்றால் வேறு வழி இல்லாமல் நீ சொல்வதை  சகித்து கொள்ளலாம் . அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான் , "சரிதான் போடா" என்று அந்த பெண் சொன்னால் இவனால் எனன செய்ய முடியும், அதிக பட்சம் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடியும்? உன்னுடன் குடும்பம் நடத்தி உன் பிள்ளையை தானே சுமந்தாள்? அவளது வேதனையை , ஆசையை புரிந்து கொள்ள மாட்டாயா ?

ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த சமயத்தில், அவள் மனதில் சில குழப்பங்கள் வந்து தான் போகும் . எப்படி இந்த குழந்தை வளர்க்க போகிறோம் நல்ல தாயாக நம்மால் இருக்க முடியுமா? இப்படி. ............................ அதுமட்டும் இல்லாமல் உடல் ரீதியான பல அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்யும். இதை எல்லாம் அம்மாவிடம் வெளிப்படியாக சொல்ல முடியும்,  மாமியாரிடம் சொல்ல முடியுமா ? சொல்லலாம் (!) அந்த மாமியாரும் நட்புடன், பாசத்துடன் தன் மகளை போல கவனித்து கொள்பவராய் இருக்கும் பட்சத்தில்.     

சில பெண்களுக்கு பிறந்த குழந்தையை சரியாக தூக்க கூட தெரியாது , குழந்தைக்கு அசௌகரியம் இல்லாம சரியாக பால் புகட்டவும் தெரியாது ,  அவளது உடலில் சோர்வும் நீங்க வேண்டும், அதற்க்கு சரியான ஓய்வு தேவை படும். 3 கிலோ குழந்தையை கூட ரொம்ப நேரம் வெச்சு இருந்தா கை, வயிற்று பகுதி எல்லாம் வலி ஏற்படும் . அந்த ஓய்வ மாமியார் வீட்ல எதிர் பார்க்க முடியாது , இப்ப இருக்கிற வயதானவர்களும் அந்த கால கட்டத்தை கடந்து வந்தவங்கன்னாலும் அவங்க கிட்ட இருந்து வர வார்த்தை "என்னமோ உலகத்துல இவ மட்டும் தான் பிள்ளைய பெத்த மாதிரி" . ரொம்ப தான் நடிக்கறா , எப்ப பார்த்தாலும் முடியலைன்னு ....நாங்கெல்லாம் அந்த காலத்துலன்னு தொடங்கி ......... ஆரம்பிச்சுடுவாங்க ,

அதோட அந்த பையன் தன் மாமியாரை  (மனைவியின் அம்மா) பற்றி நிரம்ப குறை சொல்லி கொண்டு இருந்தான் , அவர்களும் உன் அம்மாவிற்கு சமமானவர்கள் தானே? அவர்கள் தன் பெண்ணை கொஞ்ச நாட்கள் தன்னுடன் வைத்து  கொள்ள பிரிய படுகிறார்கள் . இதற்ககா இவ்வளவு ஏச்சுக்களும் , பேச்சுகளும் ?

ஆண்களே!  உங்களுக்கு எப்படி உங்க அம்மா, அப்பா முக்கியமோ அது போல தான் பெண்களுக்கும் , கல்யாணம் முடிஞ்சதுன்ற ஒரு காரணத்துக்காக அடுத்த நிமிஷமே அப்பா, அம்மாவை மறக்க முடியாது, என் குடும்பம், என் வீடுன்ற எண்ணமெல்லாம் வர கொஞ்ச நாட்களாவது தேவை படும், உங்களை பெற்றவர்கள் மட்டும் தான் கஷ்டப்பட்டு படிக்க வைத்து , வளர்த்து உங்களை ஆளாக்கினார்களா ?  ஒரு பெண்ணை புரிந்து கொள்ள முடியாதவன் , அவளது ஆசைகளை ,உணர்வுகளை மதிக்க தெரியாதவன் எதற்காக திருமணம் செய்து கொள்ளவேண்டும் ?

இது சிறிய விசயமாக தெரியலாம் , தன் மனைவியை பற்றி , அவளது குடும்பத்தை பற்றி ஊருக்கே கேட்க்கும் படி பேசிகொண்டிருக்கிறாயே, பெண்களை பெற்றவர்கள் என்றால் கேவலமா?  

"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்
தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்"

நீயும் இந்த சூழலை சந்திக்க வேண்டி வரலாம்.....................

Monday, April 19, 2010

கண்ணன் என் காதலன்

"மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்" ன்னு தொடங்கற திருப்பாவை பற்றி எங்கள் தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தும் போது தான் ஆண்டாள் பத்தியும் அவங்க கண்ணன் மேல வைச்சுருந்த அந்த காதலயும் உணரமுடிஞ்சது . அதுக்கு அப்புறமா திருப்பாவை பாடல்கள தேடி கண்டு பிடிச்சு (உபயம் திரு சுகுமாரன் அவர்கள்- எங்கள் குடும்ப நண்பரும் அரசு கலைகல்லூரி பேராசிரியர் )   அதுவும் திருமதி. எம் எல் வசந்தகுமாரி அவர்களின் குரலில் அந்த பாடல்கள கேட்கறதே ஒரு சுகம் .

"நெய்யுண்ணோம் பால் உன்னோம்னு " மார்கழி மாசத்துல விரதமிருந்து  , உடம்பு சரி இல்லாம போய் ,   "உன் உடம்புக்கு நெய்யும் பாலும் சாப்பிட்டே  தேற மாட்டேங்குது, .(!) இதுல விரதம் வேறயா" ன்னு  வாங்கி கட்டிகிட்டது  ஒரு தனி கதை .

 மார்கழி மாசத்துல ரேடியோல திருப்பாவை , திருவெம்பாவைல இருந்து தினம் ஒரு பாடல சொல்லி அதோட விளக்கத கேட்க்கும் போது கண்ணபிரான் மேலயும் ஒரு தீராத காதல் .   மார்கழி மாசத்துல டிடில குட்டி பத்மினி ஆண்டாளா  நடிச்சத பார்க்கும் போது  நான் என்னையே ஆண்டால நினச்ச காலம் எல்லாம் உண்டு, இப்படியா என்னோட கண்ணன், ஆண்டாள் காதல் தொடர்ந்தது,  இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்லறேன்னா,    போன வருஷம் "கிருஷ்ணஜெயந்தி" க்கு எங்க வீட்டு குட்டி பசங்களுக்கு கிருஷ்ண, ராதா  மாதிரி மேக்- அப் போட்ட போட்டோவ பார்த்ததுக்கு அப்புறமா இத  எழுதணும்ன்னு  தோனுச்சு .

ரஞ்சித்தும் , தேஜாவும்
நாங்க எங்க அலுவலக வேலைய எல்லாம் முடிச்சுட்டு ராத்திரி 10 மணிக்கு இந்த போட்டோவ எடுக்கும் போது (கிருஷ்ண & ராதா) ரெண்டு பேருக்குமே தூக்கம் வந்துடுச்சு .அதனால சோகமா இருக்காங்க ,  கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. ஆண்டாள் போல தான் போடணும்னு நினைச்சோம் நேரம் இல்லாததால  ராதாவாயிடுச்சு (!).


Thursday, April 15, 2010

சிசேரியன்

முன்னெல்லாம் ஸ்வீட் கொடுத்து "குழந்தை பிறந்திருக்கு " ன்னு யாரவது சொன்னா பையனா? பொண்ணான்னு கேட்கறது வழக்கம் . ஆனா இப்ப நார்மலா, சிசேரியனா ன்னு கேட்கற அளவுக்கு சிசேரியன் ரேட் அதிகமாயிடுச்சு.

WHO (WORLD HEALTH ORGANISATION) னோட கணக்கு படி ஒரு நாட்டில சிசேரியன் ரேட் 15 % க்கு மேல இருக்க கூடாதுன்னு சொல்றாங்க . ஆனா சீனால இந்த விகிதம் 46 %, ஆசியா நாடுகள்ல 25 % ம் அதிகமாயிடுச்சு.

நார்மல டெலிவரிய விட 4 மடங்கு அதிக ரிஸ்க் எடுக்க வேண்டி இருக்கு இந்த சிசரியன்ல. ஆனா இந்த விஷயங்கள் எல்லாம் தெரிஞ்ச சில மருத்துவர்களே கூடுதலா  20  ஆயிரம்  கிடைக்கறதுக்காக மனசாட்சியே இல்லாம சிசரியன பரிந்துரை செய்யறது தான் இதுல வேதனையான விஷயம், தலை திரும்பல , தண்ணி பத்தலைன்னு பல காரணங்கள். அதோட அவங்களுக்கும் பொறுமை இல்ல, சிசரியனா 30 to 45 நிமிட வேலை , முடிஞ்சுதா அடுத்த பேசன்ட்ட
பார்க்க போகலாம் , நார்மலனா எப்ப வலி வந்து , ............. எப்ப பிரசவம் பார்த்துன்னு அழுத்துக்கறாங்க..

சில இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே உபயோக படுத்த வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு சில பெண்களும் , சில மணி நேர வலிய தாங்க முடியாம , நேரமும், காலமும் சரியா இருக்கனும்கறதுக்காக தப்பா உபயோக படுத்தறாங்க .
(ஆடி மாசம் முதல் குழந்தை பிறக்க கூடாது, அமாவாசை ஆகாது, செவ்வா கிழமை பெண் குழந்தை ஆகாதுன்னு பல பல காரணங்கள் வேற ),.

சிசேரியன் மூலமா பிறக்கற குழந்தைகள் நார்மலா பிறக்கற குழந்தைகள விட கொஞ்சம் சூட்டிப்பு , புத்திசாலிதனதுல கொஞ்சம் கம்மியா இருப்பாங்கன்னு ஒரு ஆய்வுல சொல்றாங்க .

நம்ம பாட்டி , அம்மா காலத்துல எல்லாம் அரை டஜன் , ஒரு டஜன்னு வீட்ல தான்
பிரசவம் பார்த்தாங்க , ஆனா இப்ப ஒரு குழந்தை பெத்துகறதுக்குள்ள  அப்ப்பபான்னு
ஆயிடுது, நவீன உணவு முறைகளும், நவீன சாதனங்கள் வரவும் இதுக்கு ஒரு காரணம்னு சொல்லலாம்,  அதோட ரிஸ்க் எடுக்க யாருக்கும் நேரம் இல்லாததும் ஒரு காரணம், 

இந்த நிலை மாறினால் சந்தோசம் தான்............ இயற்கையோடு இணைந்த வாழ்வு என்றும் சுகமே ....................

Friday, April 9, 2010

தேஜா

" மிச்சமான மூணு ரூபாயில ஐஸ் கிரீம் சாப்பிட்டேன்  ஆ................"

இந்த விளம்பரம் தேஜாவுக்கு ரொம்ப பிடிக்கும், இப்போ
" மிச்சமான மூணு ரூபாயில கருவாடு சாப்பிட்டேன் ஏய் சீ நாத்தம்"
"மிச்சமான மூணு ரூபாயில மிளகா சாப்பிட்டேன் ஐயோ காரம்"
இப்படியா தொடருது ........................


-------------------------------------------------------------------------------------------------------
இந்த வாரம் தேஜா பாட்டி (என் மாமியார்) வீட்டில் டேரா போட்டிருக்கிறாள்.
நேத்து வீட்ல இருந்த "ரோசி" நாய் வாள பிடுச்சு இழுதுட்டா. சாதாரண நாட்டு நாய் தான் ஆனா அது எதுவும் செய்யாது . இவ சொல்றது எல்லாம் கேட்கும் . இவளுக்கும் ரோசி மேல ரொம்ப பிரியம் , (இருக்காதா  பின்ன, சாப்பாடு ஊட்டும் போது அம்மா எனக்கு ஒரு வாய் ரோசிக்கு ஒரு வாய் , ரோசி பாவம்னு சொல்லி பாதி சாப்பாட்ட ரோசி தலையில ! (இல்ல வாயில)  கட்டி விட்டுடுவா.)

வாள பிடுச்சு இழுத்ததுக்கு எங்க மாமியார் கொஞ்சம் பயத்துடன் அதிகமாகவே
திட்டிடாங்க . மேடம் ஒரே அழுகை ......... அழுதுகிட்டே "இருங்க இருங்க உங்கள என் அம்மாயி (எனது அம்மா) கிட்ட சொல்லி தரேன் என்று சொன்னது மட்டும் இல்லாம , எங்க அம்மாவுக்கு போன் பண்ணித்தர சொல்லி பிடிவாதம் பிடிக்கவும் சரி எனன தான் சொல்றான்னு பார்க்க போன் பண்ணி தந்தேன் ,

 எங்க அம்மா கிட்ட "இந்த பாட்டி எனன திட்டிகிட்டே இருக்காங்க, நீ அவங்கள திட்டுன்னு சொல்லிட்டு , அடுத்த செகண்டே எங்க மாமியார் கிட்ட போன் கொடுத்து எங்க அம்மாயி உங்கள திட்டறாங்க நீங்களே வாங்கிகொங்கன்னு சொல்றா"

எங்க அம்மாவுக்கும் எதுவும் புரியல . எங்களுக்கும் தான்  நானும், எங்க மாமியாரும் சேர்ந்து திரு திரு திரு ன்னு முழிக்க வேண்டியது ஆயிற்று, :) (உன்ன இப்படி எல்லாம் பேச சொல்லி யாருடா சொல்லி தர்றா.................
------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, April 1, 2010

இன்று நீ நாளை நான்

சென்ற வாரம் "இன்று நான் நாளை நீ" என்ற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரி ஒன்றை தயாரித்தோம். அதில் முதியோர் இல்லங்களில் இருக்கும் பெரியர்வர்களின் ஆசைகளையும் , அவர்களின் மனதில் இருப்பதையும் ரொம்பவே தெளிவாக சொன்னார்கள். அதில் ஒரு தாத்தா சொன்னார் 'வீட்டில் இருப்பதை விட இங்கே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று,  அத்துடன் அங்கு இருந்த ஒரு பாட்டி நிறைய புத்தகங்களை படிப்பவர் போலும், நிறைய தத்துவ வார்த்தைகளையும் உபயோகித்தார்,  அவருக்கு அவரது பேர குழந்தைகளை கொஞ்ச கொஞ்சமும் விருப்பம் இல்லை எனவும் வெறுப்புடன் தெரிவித்தார் , அத்துடன் "நான் எப்பவும் புத்தகங்களை தான் படிக்க வேண்டுமா , ஆசை, பாசம் எப்படின்னு தெரிஞ்சுக்க வேணாமா" என்றும் சொல்லி இருந்தார், தனது மகனின் வாரிசுகளை இந்த பாட்டி கொஞ்ச அனுமதி மறுக்க பட்ட வேதனையில் இருந்தார் பாவம்

அந்த  சமயத்தில் என் தோழி ஒருவர் நீண்ட நாட்களுக்கு முன் சொன்ன ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது . அவளுக்கு திருமணம் முடிந்து, அவளுக்கும் அவளது கணவருக்கும் சரியான புரிதல் ஏற்படுவதற்கு முன்னே குழந்தையும் உண்டானது . அந்த சமயத்திலும் அவளுக்கும் அவள் மாமியாருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது, அதனால் அவளுக்கும் அவளது கணவருக்கும் ஏற்படும் கருத்து மோதல்களுக்கு அவளது மாமியாரே காரணம் எனவும் . தன கணவரை தன்னிடம் இருந்து பிரிக்கிறார் என்றும்  எண்ணினாள்அவள் 6  மாத கர்ப்பிணியாய் இருந்த சமயத்தில் அவளது மாமியார் வீட்டை விட்டு(அவளது கணவரையும் சேர்த்தே)  துரத்தி விட்டார்,  கணவனோ அம்மா பிள்ளையாக இருந்தார்,  இருவரையுமே வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர், அப்போதே அந்த பெண் சொல்லுவாள் "என் குழந்தையை என் மாமியாரிடம் தர மாட்டேன்" என்று , குழந்தை பிறந்த பின் மாமியார் , வீட்டிற்கு அழைத்த போது அவரிடம் குழந்தையை தர மறுத்து விட்டாள்.அப்பொழுது அவள் சொன்ன வார்த்தை  " என்னையும் என் கணவரையும் பிரித்தது போல தன்னையும் தன் குழந்தையையும் பிரித்து விடுவார்கள்" என்று

அதே போல இன்னொரு பெண்ணின் மாமியாரோ,  "உனது சமபளதிற்க்காக தான் என் பையனுக்கு உன்னை திருமணம் செய்து கொடுத்தேன், அத்துடன் எங்களுக்கு இருக்கும் கடன்களை நீ அடைத்த பின் குழந்தை பெற்று கொள்" என்றும்  கூறினார்களாம் , இந்த மாதிரி மாமியார்கள் வயதான பின் அந்த மருமகள்கள் எப்படி கவனிக்க போகிறார்கள் ,

இதில் யாரை குறை சொல்வது? மருமகளின் மனச பத்தி கொஞ்ச கூட யோசிக்காமல் பல கஷ்டங்கள கொடுக்கிற மாமியார கவனிக்கலைன்னு எப்படி சொல்ல முடியும், ஆனா அதே சமயத்துல நல்ல மாமியார் மாமனார் இருந்தும் அவங்கள தங்களோட வெச்சுக்க பிரிய படாத எத்தனையோ மருமகள்களும் உண்டு,

அதுவும் மாமியார் மாமனார் என்று இருவரும் இருக்கும் போது கூட அவர்களுக்கு எதுவும் பெரிய  பிரச்சனையாக தெரியாது, யாரவது ஒருத்தர் மட்டும் இருந்து தனிமைய உணரும் போது தான்...................

Wednesday, March 24, 2010

அக்கறை

தேஜாவுக்கு எப்போதும் பொருட்களின் மேல் அதீத அக்கறை . அவளது விளையாட்டு சாமான்களை ரொம்பவும் பத்திரமாகவே வைத்து கொள்வாள். இத்தனைக்கும் அவள் எதையாவது உடைத்தாலும் கூட நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம் . அவள் விளையாட அவள் ஆராட்சி செய்ய உடைக்க தானே வாங்கி இருக்கிறோம், ஆனா அவ ரொம்ப பத்திரமா வெச்சிருக்கறது தான் எனக்கு கவலைய இருக்கு, எப்பவும் அவள சுத்தி அவளோட திங்க்ஸ் இருக்க வேண்டும், அவளோட சைக்கிள்ல மூட்ட மூட்டையா அடுக்கி வெச்சு இருப்பா, எதாவது புதுசா வாங்கி கொடுத்தா அன்னைக்கு நைட் கண்டிப்பா அவ கூட தான் அந்த பொருளும் தூங்கும்,யாரவது எடுத்துட்டு போய்டுவாங்களாம்.  இதை மாற்ற நாங்களும் எவ்வளவோ முயற்சித்து பார்த்து விட்டோம், ஆனாலும் அவளின் இந்த பழக்கத்தை மாற்ற முடிய வில்லை.
நேற்றும் அப்படி தான் கொஞ்சம் வளையலும் ஹேர் கிளிப் உம் வாங்கி கொடுத்தேன் . வளையல் மட்டும் அணிந்து கொண்டாள். மற்றவை வழக்கம் போல தலையணை பக்கத்தில் தான், இன்று அந்த ஹேர் கிளிப் போட மறுக்கிறாள்,  கேட்டால் ஸ்கூல், க்கு தான்  போட்டுட்டு போவாளாம். இன்னும் 2 1 /2  மாசத்துக்கு வீட்ல குப்பை தான் .எல்லா பெண் குழந்தைகளும் இப்படிதான் இருக்காங்களா, இல்ல இந்த பழக்கம் அவ வளர வளர சரியாயிடுமா தெரியல,
----------------------------------------------------------------------------------------------

Wednesday, March 17, 2010

புலம்பல்

தேஜாவுக்கு இந்த வாரத்துடன் பள்ளி நிறைவு பெறுகிறது, எனக்கு டென்ஷன் ஆரம்பிச்சாச்சு, எனன செய்யறது இன்னும் இரண்டரை மாதங்கள், தேஜாவும் ரஞ்சித்தும் (அண்ணா பையன்) பண்ற அட்டுழியம் தாங்க முடியாது .நாம வீட்ல இருந்தா ஏதாவதொரு ஆக்டிவிட்டில நேரம் போய்டும், நாம காலையில ஆபீஸ் வந்தா போற டைம் சொல்ல முடியாது, இப்போதைக்கு எங்க அம்மா தான் பார்த்துக்கறாங்க, அவங்களுக்கும் இப்ப உடம்பு சரி இல்ல , மாமியாரோ ஹார்ட் பேசன்ட்,
எதாவது கேம்ப்க்கு அனுபலம்னா அதுக்கான வயசும் இல்ல, 3 ,3 1 / 2  வயசு குழந்தைகள வெச்சு எனன பண்றது, அப்படியே எதாவது பாட்டு கிளாஸ் , டான்ஸ் கிளாஸ்ல  விட்டாலும் 1  மணி நேரம் தான் . அதுக்கு அப்புறம் ?

ஸ்கூல் இருக்கற நேரங்கள்ல சாப்பிடறதும், தூங்கறதும் நேர நேரத்துக்கு நடக்கும் இனி மேல் அது சாத்தியம் இல்ல, காலையில ஸ்கூல் கிளம்பற அவசரத்துல ஆட்டோ வந்துடும்னு சொல்லியே எதாவது ஊட்ட முடியும், இனி சாப்பிட  (நாம கிளம்பறதுக்கு உள்ள ஒரு வேலை முடியுமேன்னு) சொன்னா  "எனக்கு பசிக்க்கலாமா"னு சொல்லுவா எங்க வீட்டு பெரிய மனுசி (தேஜா தான்) .
 தூங்கறதுக்கும் அப்படிதான் ...

எனன மாதிரியான தாய்மார்கள் எனன பண்றாங்கன்னு தெரியல , யாராவது ஒரு ஐடியா கொடுங்களேன் ப்ளீஸ்.... ப்ளீஸ்....

Sunday, March 14, 2010

நிறங்கள்

சமீபத்தில் ஆனந்த விகடனில் திரு. கோபிநாத் அவர்கள் நிறங்களை பற்றி ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அதை படிக்கும் போது எனக்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது,

நான் சிறுவயதில் நன்றாகவே படிப்பேன். முதல் இரண்டு , மூன்று ரேங்க்குக்குள் எடுக்கும் அளவிற்கு (சத்தியமாக) .   எந்த வேலையையும் என்னிடம் கொடுத்தால் பொறுப்பாகவும் முடிப்பேன் ,  சில நேரங்களில் பரீட்சை விடை தாள்களை திருத்தும் பணியையும் ஆசிரியர்கள்  எங்களிடம் தருவார்கள்.

ஆனால் எங்கள் பள்ளிக்கு யாரவது சிறப்பு விருந்தாளிகள்
வந்தால் மட்டும் அவர்களை வரவேற்க அனுப்ப மாட்டார்கள், ஏன்னா நாங்க எல்லாம்  மாநிறமாக இருக்கும் காரணத்தால் , அந்த வயதில் எதிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வ கோளாறு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் எதுலயும் விருப்பம் இல்லாமல் அழகுல மட்டும் தனி கவனம் செலுத்த ஒரு கூட்டம் இருக்கும், நல்லா நிறம் கொண்ட அந்த பெண்கள் எல்லாம் எங்கள் வகுப்பை சேர்ந்த ஆனால் பெரிய பெண்கள், அவர்களாக எதாவது பேசி அவர்களாக  சிரித்து கொண்டே இருப்பார்கள், எதற்காக சிரிக்கிறார்கள் என்று புரியாமல் இருக்கற கூட்டம் நம்முடையது, அதுக்கு மேல கேட்டா நீங்கள்லாம்
சின்ன பொண்ணுங்க உங்களுக்கு எல்லாம் சொன்னா புரியாதுன்னு சொல்லுவாங்க.

அந்த பெண்களை மட்டுமே தெரிவு செய்து அந்த சிறப்பு விருந்தினர்க்கு அன்பளிப்பு அளிக்க செய்யும் போது எங்களை போல சிலருக்கு எப்படி இருக்கும்? அந்த மாதிரி சமயத்துல கொஞ்சம் ஒதுங்கியே தான் இருப்போம்  .அப்ப தான் நாமளும் சிவப்பா பிறக்கலேன்னு தோன்றியது . நாமாக நிறத்தை பற்றிய ஒரு எண்ணத்தை நினைக்காத போதும் , அந்த பாகுபாட்டை பள்ளிகளே செய்தன .
(ஆனா நல்லா படிக்கற பொண்ணுங்க எல்லாம் சுமாராத்தான் இருப்பாங்களோ! எங்க கிளாஸ்ல அப்படி தான் இருந்தோம் .)

டீன் ஏஜ்ஜில் நிறம் ஒரு பெரிய பிரச்சனையே . நானும் என் மற்ற மாநிற தோழியரும் கண்ட கண்ட அழகு சாதன பொருட்களையும் வாங்கி முயற்சித்தோம், ஒன்றும் பலன் இல்லை, (அப்ப நடந்த சில போட்டிகளில் நாங்க கலந்துக்கவே இல்ல வேணும்னே தான் )அந்த சமயத்துல தான்  எங்களது ஆதங்கத்தை எங்கள் கணித ஆசிரியருடன் பகிர்ந்து கொண்ட போது அவர் சொன்னது இது தான் , (அவர் எப்போதும் நன்றாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பார்).  இன்னும் உன் திறமையை  வளர்த்து கொள் . உன் திறமையை கண்டு பலரும் உன்னை திரும்பி பார்க்கும் படி செய் என்று என்னையும் என் தோழியரையும் உற்சாக படுத்தினார்கள்.
அழகுங்கறது நிரந்தரம் இல்லன்னும் சொன்னார். அதுக்கு அப்புறமா அழகுக்காக செலவு செய்ய, நேரமோ , பணமோ செலவழிக்க வில்லை,

அதன் பின் இன்னும் அதிகமாகவே  படித்தோம் அவர் சொன்னது போல நல்ல மதிப்பெண்களையும் பெற்று,  இன்று நன்றாகவே இருக்கிறேன் , எங்கோ கேள்வி பட்டது ,

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான்
கருப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்பு தான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
மனிதனின் எண்ணங்களில் இருக்கிறது.................

Thursday, March 4, 2010

யாருக்கும் வெட்கமில்லை

கடந்த 2 நாட்களாக பரபரப்பான செய்தியே பரமஹம்ச நித்யானந்தர் பற்றியது தான்.
இந்த விசயத்திற்கு இவ்வளவு ஆர்பாட்டம்  வேண்டுமா? இதில் நித்யானந்தர் செய்தது மட்டும் தான் குற்றமா.? என்னை நம்ம்புங்கள்  என்று அவனா சொன்னான், அவனது பேச்சும் கருத்துக்களும் பிடித்ததென்று பின்னாலயே சென்றதே ஒரு கூட்டம் அவர்கள் மேல் பிழை இல்லையா?  காவி உடுத்தி கொண்டு யார் எனன சொன்னாலும் கேட்க்க ஆட்டு மந்தையாய் சுற்றிய கூட்டதார்க்கு எங்கு சென்றது அறிவு,

அவனது லீலையை வெளிகொன்று வரும் பொருட்டு அந்த பெண்ணின் மானமும் அல்லவா போகிறது . இதில் கண்டிப்பாக அந்த பெண்ணை குறை சொல்ல முடியாது  ஒரு பெண் தனக்கு பிடித்தமானவருடன் இருக்கிறாள்,இதை எப்படி குறை சொல்ல முடியும் ?அது சரியோ தவறோ அவளுக்கு பிடித்தது ,ஆனால் அவளுக்கும் வெட்கம் இருக்கும்,

 அந்த அந்தரங்கத்தை பறை சாற்றிய ஊடகம்  செய்தது மட்டும் சரியாகுமா?
ஊடகத்திற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது . இப்படி ஒரு விஷயத்தை அப்பட்டமாக பட்ட பகலில் காண்பிப்பது சரியா? ஒவ்வொரு பதினனது நிமிடத்திற்கு ஒரு முறை , இதுவும்  ப்ளூ பிலிம் மாதிரி தானே ? அந்த சேனலின் T R B  ரேட் உயர்வதற்காக எதை வேண்டுமானாலும் காண்பிக்கலாமா? அப்ப அவர்களின் வக்கிர எண்ணங்களை எனன சொல்ல்வது?
10 மணி செய்திகளுக்கென்று ஒரு சிறப்பே இருக்கிறது, அன்றைய நாளின் மொத்த நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும் , சில குடும்பங்களில் ஒரு வழக்கம் உண்டு, 10 மணி செய்தியை குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒன்றாக தான் பார்ப்பார்கள், இதில் நடுத்தர வயதுள்ள குழந்தைகளும் அடங்கும், செய்திகளுக்கான சேனலில் இப்படி கொஞ்சம் கூட சமுக அக்கறை இல்லாமல் நடந்நது கொண்ட அந்த தொலை காட்சியை எனன சொல்வது , முன்பெல்லாம் இது மாதிரியான செய்திககள்
காண்பிக்கும் பொழுது நிறைய மறைக்க பட்டு சரியாக தெரியாதது மாதிரி இருக்கும் ஆனால் இப்போது அப்பட்டமாக காண்பிக்கிறார்கள் ,  குழந்தைகளுடன் நியூஸ் பார்க்க கூட முடிவதில்லை.

பிரேமானந்தா, அர்ச்சகர், கல்கி , நித்யானந்தர் இந்த வரிசையில் அடுத்தது யாரோ ????????
ஆக மொத்தத்தில் ஏமாற ஒரு கூட்டம் இருந்தால் ஏமாற்ற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்.

Thursday, February 25, 2010

செல்ல குட்டி

தேஜாவுக்கு இப்பெல்லாம் அவங்க அப்பாவ வம்புக்கு இழுககறதே வேலையா போச்சு .
" இன்னைக்கு உங்க சோப்பு போட்டு தான் குளிக்க போறேன்" - இது தேஜா
"என்னோட சோப்பு தொடாத , நீ என் சோப்பு போட்டு குழிச்சா நான் உன்னோடத  எடுப்பேன்"  பக்கத்தில் இருந்த ரின் சோப்பை காட்டி "இந்தா இந்த சோப்பு போட்டு குளி" - தேஜா அப்பா
"நான் என்ன துணியா? "
என்ன சொல்றதுன்னு தெரியாம தேஜா அப்பா    :)! -
----------------------------------------------------------------------------------------------------------------------------

தேஜாவும் நானும் எதாவது படிக்கும் போது ஒவ்வொரு வார்த்தைக்கும தமிழ்ல அர்த்தம் சொல்லிவிடுவேன். திடீர்னு ஒரு முறை என்னிடம் என் பெயரை சொல்லி இது தமிழா இங்கிலிஷா என கேட்க்க , நானும் தமிழ் தான்னு
 சொல்ல அப்ப இங்கிலிஷ்ல உன் பேர் என்ன? இங்கிலீஷ் ளையும் என் பேரு இது தாண்டா,  " உனக்கு மட்டும் ஏன் ஒரே பேரு , உங்க அம்மா உனக்கு இங்கிலீஷ் ல பேர் வைக்க மறந்துட்தாங்களா "
திரு திரு .................. (அட நான் தாங்க)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தேஜா ஸ்கூல்ல நேத்து ஸ்போர்ட்ஸ் டே. அவளுக்கு " Ball Hunting" ல செகண்ட் Prize. மேடம்க்கு சந்தோசம் தாங்கல ,எல்லாரும் clap பண்ணினார் களாம். இது வரை அவளுக்கு Prize கிடைத்ததில்லை. கொஞ்ச நாள் முன்னாடி recitation competition ல அன்னை தெரசா மாதிரி டிரஸ் பண்ணிட்டு,(அன்னை தெரசா quotes சொல்லி தந்தேன் வீட்ல ரொம்ப கரெக்டா சொன்னா). ஆனா  அங்க எதுவும் சொல்லாம வந்துட்டா .என்னுடைய அண்ணா பையன் ரஞ்சித்தும் அதே class ல தன படிக்கிறான் அவன் கரெக்டா சொல்லி அவனுக்கு பரிசு கிடைத்தது, நாங்க எதுவும் compare பண்ணி பேசலைன்னாலும் தனக்கு பரிசு கிடைக்கலன்னு கொஞ்சம் feel  பண்ணினா. (இந்த வயசுலயே எப்படி எல்லாம் பீல் பண்றாங்கப்பா). இந்த முறை prize வாங்கிட்டா சந்தோசம் தான் .
------------------------------------------------------------------------------------------------------------------------------

தேஜாவுக்கு "செல்லகுட்டின்னு" கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும். அவ ஒரு முறை செய்த ஒரு தவறுக்காக அவளை திட்டிய போது என்னிடம் அழுது கொண்டே " பார் என் நெஞ்ச தொட்டு பார் எப்படி வேகமா துடிக்குது . நான் பயந்துட்டேன் எனன செல்லகுட்டின்னு சொல்லு " ன்னு சொல்லற அவள பார்க்கும் போது ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் , இப்படியெல்லாம் பேச சொல்லி யார்டா சொல்லிதரதுன்னு கேட்க்க தோணுது . அப்புறம் எங்க கோப படறது..................
செல்ல குட்டி இன்னும் வரும்.............
---------------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, February 22, 2010

'ஹைடி'- ithu vilambaram alla

'ஹைடி'
இது விளம்பரம் அல்ல.
ஹைடி இது சுட்டி டிவிஇல் தினமும் காலை ஒளிபரப்ப படும் ஒரு தொடர், சுட்டி டிவி இல் வரும் ஒரு உருப்படியான நிகழ்ச்சி. ஹைடி மலையில் வசிக்கும் ஒரு சின்ன பெண். அங்க இருக்கற இயற்கையை ரசிச்சுகிட்டு, இயற்கையோட வாழறா. அதுல காமிக்கிற மலைகளும் அவங்க வாழ்க்கையையும் ரொம்ப அழகா இருக்கு, ஹைடி பட்டாம்பூச்சி கூடவும், ஆட்டு குட்டி கூடவும் பேசி விளையாடறத பார்க்கும் பொழுது  நமக்கே ஆசையா இருக்கு,இதுல கிராமத்து வாழ்க்கைக்கும், நகரத்து வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசமும் ரொம்பவே அழகா நமக்கு புரியும், உண்மையிலே குழந்தைகள் நாய், பூனை பார்த்து எல்லாம் பயப்பட மாட்டங்க, அதோட பேசுவாங்க , ரொம்ப அன்பா விளையாடுவாங்க, நாம தான் வளந்ததுக்கு அப்புறமா இதெல்லாம் ரசிக்க மறந்திடறோம் . அதுல காமிக்கற மாதிரி ஒரு கிராமமும் இப்ப இருக்குமான்னு தெரியல,  ஒவ்வொரு சீசன் னா கதை நகருது அதனால சீசன் பதியும் குழந்தைகளுக்கு நாம சுலபமா கத்து  கொடுக்க முடியுது, அது மட்டும் இல்லாம உயிர்களிடத்து அன்பு வேணும்ங்கறத உணர வைக்குது ,ஹைடி ஸ்கூல்க்கு போகணும்னு விருப்பப்படும் போது அவங்க தாத்தா  சொல்லுவாரு பள்ளிக்கூடம் கத்துதரத விட பல மடங்கு கிராமத்துல நீ கத்துக்கலாம்னு .  அது உண்மை தான . ஒரு செடி எப்படி வளர்துன்னு நாம புக் ல படத்த  பார்த்து தான தெரிசுகறோம் .அத மனப்பாடம் செஞ்சு தான மனசுல நிறுத்திகிறோம்.  அனுபவத்துல தெரியறது இல்ல .
                              இயந்திர தனமா இயங்கிட்டு இருக்கற நாம நல்ல பல விசயங்கள ரசிக்க மறந்திடறோம் எதுக்காக பணம் சம்பாதிக்கறோம், நாம எத நோக்கி போயிட்டு இருக்கோம் இதெல்லாம் நம்மக்கே தெரியாது இயற்க்கைய அழிச்சுட்டு செயற்கையான விசயங்களுக்கு நாம முக்கியத்துவம் கொடுக்கறோம் அதையே ரசிக்கவும் செய்யறோம் . நாமும் நம்ம குழந்தைகளுக்கு இயற்க்கைய ரசிக்க பழக்கலாமே .
இன்னும் வரும்

Thursday, February 18, 2010

ஸ்கூல்


தேஜா இப்போது நர்சரியில் படிக்கிறாள். கடந்த ஒரு வாரமாக ஹோம் வொர்க் கொடுக்கிறார்கள். முதலில் STANDING லைனில் ஆரம்பித்து E F I T இந்த மாதிரி எழுத்துக்களை எழுத பழக்க படுத்துகிறார்கள். முதல் இரண்டு நாட்கள் எழுத ரொம்ப ஆசை பட்டாள். இபோது அவளுக்கு எழுதவே விருப்பம் இல்லை. ஒரு வகையில் பார்த்தால் பாவமாக இருக்கு. ஆனால் இந்த ஹோம் வொர்க் குடுக்கறதுக்கு முன்னாடி அவளாகவே சுவற்றிலும், எந்த புக் கிடைச்சாலும் அதுலயும் ரொம்பவே கரெக்டா A, B, T,H E NNU சில எழுதுக்கள எழுதிட்டு இருந்தா. கண்டிப்பா HOMEWORK செய்யணும்ணு சொன்னா என்னைபார்த்து பார்த்து சிரிச்சுகிட்டே இருக்கறா . அவ சிரிப்ப பார்த்ததுக்கு அப்புறமா என்ன பண்றது.ஆனாலும் எப்படியோ தாஜா பண்ணி எழுத வைக்கறது தான் . நானெல்லாம் 5 வயசுல தான் எழுதவே ஆரம்பிச்சேன் . ஆனா இப்ப இருக்கற EDUCATION SYSTEM வேறமாதிரி இருக்கு, இங்க ஒரு SCHOOL ல PRE-KG (2 1/2 YRS) சேக்கறதுக்கு குழந்தைக்கு INTERVIEW. அந்த குழந்தை ALPHABET சொல்லனுமாம். உங்க அப்பா அம்மா எங்க வொர்க் பண்றாங்கன்னு கேட்டா சொல்ல தெரியணுமாம். அப்படிசொல்ல தெரியலன்னா ADMISSION கிடையாது என்னை கொடுமை இது, இந்த மாதிரியான ஸ்கூல நாம தேர்ந்தெடுக்க கூடாதுன்னு நினைச்சா சாதாரண MATRIC SCHOOLAYUM INTERVIEW IRUKKUNU சொல்லறாங்க .
தற்போது இருக்கும் பல நர்சரி பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் மேலை நாட்டு முறையை பின்பற்றுவதாக சொல்லுகிறார்கள் . அவர்கள் எதோ MONTESSORI அம்மாவின் வாரிசுகளாக தங்களை நினைச்சுட்டு அவரது கல்வி முறைப்படி ஒரு கோடு கூட பிசகாமல் மாணவர்களை வழிநடத்துபவர்கள் மாதிரி தான் பேசுவாங்க. அதிலும் மிக பெரிய கொடுமை
MONTESSORI அம்மையார் சொன்னது என்னவோ தாய் மொழி கல்வி தான் சிறந்ததுன்னு , அவரோ இத்தாலியை சேர்ந்தவர் அவருக்கும் ஆங்கில வழி கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, ஆனா இங்க எல்லா ஸ்கூல் ஆங்கிலதேயே அடிப்படைய வெச்சு கற்று கொடுக்கும் சூழ்நிலை. ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே, அறிவு அல்ல என்பது பலருக்கு புரிவதில்லை .

இது புரிஞ்சாலும் வேற தமிழ் வழி கல்வி கர்பிக்கற ஸ்கூல் அருகில் இல்ல . அதனால வேற வழி தெரியாம நானும் இங்கிலீஷ் மீடியம் தேடி ஓட வேண்டி இருக்கு, இதுலயும் ஒவ்வொரு SCHOOLYUM ஒவ்வொரு மாதிரியான கல்வி திட்டம் MATRIC, CBSE ன்னு இதுல எத தேர்ந்தேடுக்கரதுன்னு ஒரே குழப்பம் . சமசீர் கல்வி திட்டம் வரதுக்கு முன்னாடியே பல ஸ்கூல்ம தங்களோட ஸ்கூல் ல CBSE க்கு மாதிடரங்க . இன்னும் ஸ்கூல்ல பத்தின பல விஷயங்கள் இருக்கு அடுத்த பதிவிலயும் இது தொடரும்.

டெஸ்ட் msg

நீண்ட நாள் யோசனைக்கு பின் எப்படியோ ப்ளாக் திறந்தாயிற்று.
சும்மா எதாவது எழுதலாம் என்று , முதலில் தேஜாவை பற்றி .............
நீ என் கருவறையில் இருந்த காலத்திலிருந்தே உன்னை பற்றிய சிந்தனை தான் என்மனதில்.
உன்னை அப்போதிருந்தே ரசிக்க ஆரம்பித்தேன். நீ என் வயிற்றில் சுற்றிவரும் ஒவ்வொரு முறையும் எனக்கு பல உடல் உபாதைகள் ஏற்பட்ட போதும் நீ அக்டிவ இருக்கரயினு சந்தோஷ படுவேன்,
எப்படியோ நீயும் பிறந்து மூன்று வருடங்கள் ஓடிடுச்சு . இன்னும் வர்ற பதிவுகள்ள நிறைய எழுதறேன். தேஜா பத்தி மட்டும் இல்லாம நிறைய ..................
இன்னும் வரும்